மன்னார் சாந்திபுரம் பகுதியில் தீ விபத்து : தீக்கிரையான வீடு
மன்னார் (Mannar) சாந்திபுரம் பகுதியில் இன்று (27) காலை குடிசை வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக வீடு முற்றாக எரிந்து தீக்கிரையாகிய நிலையில் மக்களின் உதவியால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மன்னார் சாந்திபுரம் சிறுவர் பூங்காவிற்கு பின் பகுதியில் திடீரென தீ பரவல் ஏற்பட்ட நிலையில் இதனை அவதானித்த மக்கள் விரைவாக செய்யப்பட்டதன் அடிப்படையில் தீப்பரவல் அருகில் உள்ள வீடுகளுக்கு பரவ முன்னதாக அணைக்கப்பட்டுள்ளது.
வீட்டில் காணப்பட்ட உடமைகள்
அதே நேரம் மன்னார் மின்சார சபை, மன்னார் நகர சபையின் தீயணைப்பு வாகனம் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்ததுடன் முழுமையாக தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
குறித்த தீ பரவல் காரணமாக எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை.
எனினும் வீட்டில் காணப்பட்ட உடமைகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
