இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
கடந்த வாரம் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியைப் பதிவு செய்து வந்த நிலையில் இன்றைய தினம் (27) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294.01 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 302.77 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி
இதேவேளை ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 364.53 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 378.51 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305.95 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 318.56 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 203.11 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 211.70 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 182.99 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 192.47 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
வங்கிகளில் நிலவரம்
இந்நிலையில், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், வங்கிகளில் இன்று (27) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியும் அதிகரித்துள்ளது.
செலான் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 294.25 இற்கும் விற்பனை பெறுமதி ரூ. 302.25 இற்கும் பதிவாகியுள்ளது.

NDB வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 294.75 முதல் ரூ. 294.25 இற்கும் விற்பனை விலை ரூ. 304.75 முதல் ரூ. 304.25 பதிவாகியுள்ளது.
இதேவேளை அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ.292.48 முதல் ரூ. 292.97 இற்கும் ரூ. 302.97 முதல் ரூ.303.48 முறையே பதிவாகி இருப்பதாக மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 292.95 முதல் ரூ. 292.46 வரையிலும் விற்பனை பெறுமதி ரூ. 302.50 முதல் ரூ. 302 என்றவாறாகக் காணப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri