அம்பாறையில் வீடொன்றில் நள்ளிரவில் தீப்பரவல்
அம்பாறை- சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி பளவெளிப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று (23.9.2026) நள்ளிரவு வேளையில் திடீர் தீப்பரவல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த தீப்பரவலின் காரணமாகக் குறித்த வீடு பகுதியளவில் தீக்கிரையாகி சேதமடைந்துள்ளது.
அத்துடன், வீட்டின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்து
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சம்பவம் தொடர்பாகச் சம்மாந்துறை பொலிஸாருக்கு உடனடியாகத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்குச் சென்ற சம்மாந்துறை பொலிஸார், தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத விவரங்கள் குறித்த விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பொலிஸாரின் மேலதிக விசாரணைகளின் பின்னரே தீப்பரவலுக்கான உண்மைப் பின்னணி தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



சீனப் பெண் உளவாளியின் காதல் வலையில் சிக்கிய தொழில்நுட்ப கோடீஸ்வரர்: எச்சரிக்கும் அமெரிக்கா News Lankasri
Bigg Boss 10: முனியம்மாவின் 200 கிலோ சிக்கன் Luxury Purchases.... விஜய் சேதுபதி கேட்ட கேள்வி Manithan