ஸ்டார்மரின் வீட்டில் திடீரென தீப்பரவல்.. தீவிர விசாரணையில் லண்டன் பொலிஸார்
லண்டன் வடக்கு பகுதியில் உள்ள பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த விபத்து தொடர்பில் லண்டன் மெட்ரோபொலிடன் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஞாயிறு அதிகாலை 1:35 மணியளவில் ஏற்பட்ட இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீக்கான காரணம்
அதேவேளை, பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட அவசர சேவைகளை பிரதமர் ஸ்டார்மர் நன்றி தெரிவிக்கின்றார்.

இது ஒரு உயிரின் பாதுகாப்பு தொடர்பான விசாரணையாக இருப்பதால் மேலதிகமாக எதுவும் தெரிவிக்க முடியாது” எனக் கூறப்பட்டுள்ளது.
பொலிஸார் விடுத்த செய்திக்குறிப்பில், ஞாயிறு அதிகாலை 1:35 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக அழைப்பு வந்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வீட்டின் நுழைவாயில் பகுதிக்கு சேதம் ஏற்பட்டதாகவும், எந்த உயிரிழப்பும் இல்லையெனவும் அவர்கள் உறுதிப்படுத்தினர்.
அதேவேளை, தீக்கான காரணம் இது வரை வெளியிடப்படாத நிலையில் தற்போது அந்த வீட்டு அருகிலும் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri