மிக பெரும் அணு ஆயுத மோதலை தடுத்து நிறுத்திய அமெரிக்கா!
நாங்கள் சர்வதேசத்தின் முக்கிய இரு நாடுகளுக்கு இடையில் இடம்பெறவிருந்த மிகப்பெரும் அணு ஆயுத மோதலை தடுத்து நிறுத்தியுள்ளோம் என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் மோதல் குறித்து கூறுகையிலேயே ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இந்தியா - பாகிஸ்தான்
"நாங்கள் ஒரு அணு ஆயுத மோதலை நிறுத்தியுள்ளோம். அது ஒரு மோசமான அணு ஆயுதப் போராக இருந்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.
#WATCH | On India-Pakistan understanding, US President Donald Trump says, "...We stopped a nuclear conflict. I think it could have been a bad nuclear war. Millions of people could have been killed. I also want to thank VP JD Vance and Secretary of State, Marco Rubio, for their… pic.twitter.com/9upYIqKzd1
— ANI (@ANI) May 12, 2025
மில்லியன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம். துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் மற்றும் வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோரின் பணிக்காகவும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் உடனடி போர்நிறுத்தத்தை ஏற்படுத்த எனது நிர்வாகம் உதவியது.
இதன் விளைவாக நிலம், வான் மற்றும் கடல் வழியாக அனைத்து இராணுவ நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட்டன.
இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தலைமைகள் அசைக்க முடியாதவை. சக்திவாய்ந்தவை” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
