சவூதி அரம்கோ எண்ணெய் நிலையத்தில் தீ விபத்து..!
சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் இன்று(08.11.2026) பல வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
யேமன் ஆயுதப் படைகள் சவூதி அரேபியாவின் முக்கிய இலக்குகள் மீது அதிகாலை தாக்குதல்களை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சடலங்கள் மீட்பு
இதற்கிடையில், சவூதி அரம்கோ நிறுவனத்துக்குச் சொந்தமான கிழக்கு மாகாணத்தின் அப்கைக் (Abqaiq) பகுதியில் அமைந்துள்ள எண்ணெய் உற்பத்தி நிலையங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மற்றொரு தகவலின்படி, கடந்த ஜூலை 13ஆம் திகதி முதல் சவூதி அரேபியாவின் தாக்குதல்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளால் 1,039 பேர் கொல்லப்பட்டதாக அல்லது காயமடைந்ததாக யேமனின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், சன்ஆ மாகாணத்தில் வீடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களின் உடல்களை மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து மீட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.