திருமண மண்டபத்தில் பாரிய தீ விபத்து: 100 பேர் பலி 150 பேர் காயம்
ஈராக்கில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 100 பேர் உயிரிழந்துள்ளதுடன் 150 பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத் தீ விபத்தானது ஈராக்கின் வடக்கில் உள்ள நினவா மாநில அல்-ஹம்டனியா பகுதியில், உள்ளுர் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 10..45 மணியளவில் ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வாணவேடிக்கை
மேலும், தீ விபத்து ஏற்பட்டபோது சுமார் 1000 பேர் திருமண கொண்டாட்டத்தில் இருந்ததாக வெளிநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தீயணைப்பு விரர்கள் தீயை அணைக்க போராடிவரும் நிலையில், விபத்தில் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு ஈராக்கியப் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
திருமணத்தின் போது பயன்படுத்தப்பட்ட வாணவேடிக்கைகளால் மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
