நேபாளம் செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் கைது
இந்தியாவின்,உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்ட இந்திய -நேபாள எல்லையில் உள்ள ராஜ்ஜந்வா (Rajjanwa) சோதனைச் சாவடிக்கு அருகில், மூன்று இலங்கையர்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணும், பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அஜித்குமார் (39), கௌசல்யா (38), பிரதாப் (38) ஆகிய மூவரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த தர்ம சுதாகர் (35) என்பவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடவுச் சீட்டு
இவர்கள் முச்சக்கர வண்டி மூலம் எல்லைப் பகுதிக்கு வந்து, நேபாளத்திற்குச் செல்லும் வழியைக் கேட்டுள்ளனர்.

பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட சோதனையில், இவர்களிடம் இருந்த இலங்கை கடவுச் சீட்டுக்களில் உள்ள விசாக்களின் காலம் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பே முடிவடைந்துள்ளது தெரியவந்தது.
இந்த நிலையில், இவர்களது பயணம் எதற்காக திட்டமிடப்பட்டது மற்றும் நேபாளத்தில் எங்கு செல்ல முயன்றனர் என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொழித் தடை காரணமாக, இவர்களது வாக்குமூலங்களைப் பதிவு செய்ய மொழிபெயர்ப்பாளர் உதவியும் நாடப்பட்டுள்ளது.