பிரான்சின் வன்முறையில் ஈழத்தமிழ் வர்த்தகருக்கு காத்திருந்த பெரும் ஆபத்து..!
பணவீக்கம், எரிபொருள் விலை உயர்வு மற்றும் கல்வித்துறை தொடர்பான அதிருப்தி உள்ளிட்ட காரணங்களால் போராட்டங்கள் ஆரம்பித்ததாகவும் பின்னர் அவை வன்முறைச் சம்பவங்களாகவும் கொள்ளைச் சம்பவங்களாகவும் மாறியதாகத் பிரான்ஸிலுள்ள வர்த்தகர் லெனின் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பிரெஞ்சு அரசாங்கமும் பொலிஸாரும் போதிய முன்னேற்பாடுகளைச் செய்யத் தவறியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதற்கிடையில், கலவரங்களால் பெரும்பாலான ஈழத்தமிழர் வர்த்தக நிறுவனங்கள் பெரியளவில் பாதிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட அவர், ஒரு ஈழத்தமிழ் நகைக்கடை உரிமையாளர் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நகை வாங்குதல், விற்பனை செய்தல் மற்றும் கடிகாரங்களைப் பழுதுபார்த்தல் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டிருந்த குறித்த வர்த்தகரின் கடை முற்றாகச் சேதப்படுத்தப்பட்டதுடன், அங்கிருந்த பொருட்களும் கொள்ளையிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த வன்முறைச் சம்பவங்கள் திட்டமிட்ட அரசியல் பின்னணியைக் கொண்டிருக்கக்கூடும் எனவும், வரவிருக்கும் தேர்தல்களுடன் இவை தொடர்புபட்டிருக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.
தற்போது கலவரங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகள் சுத்தப்படுத்தப்பட்டு, நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி..