வைத்தியசாலையின் 6வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு
மனநலம் பாதிக்கப்பட்டு தெல்தெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவர் வைத்தியசாலையின் ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையின் 6வது மாடியில் உள்ள அறையொன்றில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், மாடியில் இருந்து தவறி விழுந்து பலத்த காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
சமபவத்தில் உயிரிழந்த சிறுவன், பன்வில - கந்தேகும்புர பகுதியைச் சேர்ந்த ஹர்ஷன லக்ஷான் தில்ருகச என தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan