மட்டக்களப்பு - ஏத்தாளைக்குளம் காட்டுப்பகுதியில் தீ பரவல்
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏத்தாளைக்குளம் காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏத்தாளைக்குளம் காட்டுப்பகுதியில் இந்த தீ விபத்துச் சம்பவம் ஏற்பட்டுள்ளது.
ஏத்தாளைக்குளம் மற்றும் அதனை அண்டிய பகுதியானது சுற்றுச்சூழல் பாதுகாப்பு வலயமாகவும் பறவைகள் சரணாலயமாகவும் காணப்படுகின்றது.
பொலிஸார் விசாரணை
இந்த நிலையில், இன்று(26) அந்த பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த களுவாஞ்சிகுடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை உத்தியோகத்தர்கள் தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளினால் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன் பாரிய சேதகங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.
அத்துடன், அந்த பகுதிக்கு வருகைதந்த வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களும் குறித்த தீ விபத்துச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும், குறித்த தீ விபத்துச் சம்பவம் தற்செயலா அல்லது திட்டமிட்ட செயற்பாடுகளா என்பது தொடர்பிலான தகவல்கள் இதுவரையில் வெளியாகாத போதிலும் இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam
4 நாள் முடிவில் வசூல் வேட்டையில் தெறிக்கவிடும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan