புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வெளியானமை குறித்து விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு
அண்மையில் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்கள் முன்னதாகவே வெளியான விடயம் குறித்து முழுமையானதும் சுதந்திரமானதுமான விசாரணையொனறை நடத்துமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
கல்வி அமைச்சின் முக்கிய அதிகாரிகள் மற்றும் இலங்கை பரீட்சைத் திணைக்கள உயரதிகாரிகள் கலந்து கொண்ட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் அலுவலகத்தில் இன்று(26) மாலை நடைபெற்றுள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துரையாடலுக்குத் தலைமை வகித்து கருத்து வெளியிடும்போது மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
சுயாதீனமான விசாரணை
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் இந்த விடயம் குறித்து சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
தற்போதைக்கு வெளியிடப்படாமல் இருக்கும் சகல பரீட்சை முடிவுகளையும் சீக்கிரம் வெளியிட ஏற்பாடு செய்ய வேண்டும்.

இனிவரும் காலங்களில் பாடசாலைகளில் நடைபெறும் வைபவங்களுக்கு அரசியல்வாதிகளை அழைப்பதைத் தவிர்க்க வேண்டும்.“என அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த சந்திப்பில் பிரமதரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்திர உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
                                            
                                                                                                                                    
    
    
    
    
    
    
    
    
    
    திடீரென பழனிவேல் செய்த காரியம், கண்ணீர்விட்டு அழுத கோமதி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
    
    தேவகியாக, எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகையின் நிஜ அம்மா தான் நடிக்கிறாரா?... வெளிவந்த சுவாரஸ்ய தகவல் Cineulagam