பிரபல வர்த்தகர் ஜானகி சிறிவர்தன கைது
பிரபல வர்த்தகர் ஜானகி சிறிவர்தன குற்றப்புலனாய்வு பிரிவனரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
செல்வந்தர்களை மையப்படுத்தி கோடிக்கணக்கான பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குறூப் ப்ரைவட் லிமிடட் நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும் திலினி பிரியமாலியுடன் மோசடி நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜானகி சிறிவர்தன குறித்து வெளியான தகவல்
திலினி பிரியமாலியின் பின்னணியில் செயற்பட்டவர் வர்த்தகர் ஜானகி சிறிவர்தன என ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன அண்மையில் தெரிவித்திருந்தார்.
ஜானகி சிறிவர்தன சுதந்திரமாக இருக்கும் வரை இந்த விசாரணைகளை முறையாக மேற்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, திலினி பிரியமாலிக்கு வர்த்தகர்களை அறிமுகப்படுத்தியதாக கூறப்படும் ஜானகி சிறிவர்தன என்ற பெண்ணை கைது செய்வதற்கு சீ.ஐ.டியினர் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமெனவும் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன மன்றில் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri

Viral Video: கழுகுடன் வானில் பறந்து செல்லும் மீனின் தத்ரூப காட்சி! திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் காட்சி Manithan
