மின்சாரக் கட்டணத் திருத்தம்: இறுதி முடிவு அடுத்த வாரம் அறிவிப்பு!
இலங்கையில் 2026ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதி முடிவை அடுத்த வாரம் அறிவிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்பார்க்கிறது.
தேசிய மின்சார கட்டமைப்பு இயக்குநரகம் (NSO) 2.88% கட்டண அதிகரிப்பைக் கோரியுள்ளது.
இறுதி முடிவு அடுத்த வாரம்
ஆனால் ஆணைக்குழு ஆரம்ப மதிப்பாய்வில் 1.46% அதிகரிப்பையே பரிந்துரைத்துள்ளது.
இந்தநிலையில் இன்று (நவம்பர் 05) கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் முற்பகல் 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பொதுமக்கள் கருத்துக் கேட்பு நடைபெறுகிறது.

40க்கும் மேற்பட்ட நுகர்வோர் அமைப்புகள் மற்றும் மின்சாரத் துறை பிரதிநிதிகள் இதில் கருத்துகளை முன்வைக்க உள்ளனர்.
இதன் அடிப்படையில், இறுதி முடிவு நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.