கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் பகீர் தகவல்களை அம்பலப்படுத்திய சந்தேக நபர்
பிரபல பாதாள உலகக் குழு தலைவர்களில் ஒருவரான கணேமுல்ல சஞ்சீவ படுகொலை தொடர்பில் பல அதிர்ச்சித் தகவல்களை சந்தேக நபர் வெளியிட்டுள்ளார்.
அண்மையில் அசர்பைஜானில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட மனோஜ் சுரங்க லியனகே எனப்படும் படுவத்தே சஞ்சீவ இந்த தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார்.
சஞ்சீவ மீது துப்பாக்கிச் சூடு
கொழும்பு நீதவான் நீதிமன்றில் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது சந்தேக நபர் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இந்த படுகொலை சதித் திட்டத்தை கெஹல்பத்தர பத்மே என்ற பாதாள உலகக்குழு தலைவருடன் இணைந்து தாம் மேற்கொண்டதாக படுவத்தே சாமர ஒப்புக் கொண்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றில் பௌத்த பிக்கு வேடமிட்ட ஒருவரை பயன்படுத்தி கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச் சூடு நடத்த கெஹல்பத்தர பத்மே திட்டமிட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் தாம் அந்த திட்டத்தை மாற்றி சட்டத்தரணி ஓருவர் போன்று வேடமிட்ட ஓருவரை பயன்படுத்தி இந்த கொலையை மேற்கொண்டதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இந்த காரணிகளை கவனத்திற் கொண்ட நீதிமன்றம் சந்தேக நபரை எதிர்வரும் 13ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.