சபாநாயருக்கு எதிராக சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தில் முறைப்பாடு செய்யத் தீர்மானம்
சபாநாயருக்கு எதிராக சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது ஈரான் - இஸ்ரேல் மோதல் குறித்து கருத்து வெளியிடுவதற்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இடமளித்திருக்கவில்லை.
அதன் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை மண்டபத்தில் இருந்து வெளிநடப்புச் செய்திருந்தனர்.
சபாநாயகரின் செயற்பாடு
இந்நிலையில் சபாநாயகரின் செயற்பாடு ஜனநாயக விரோதமானது என்று கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், இது தொடர்பில் சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தில் முறைப்பாடு மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா நேற்றைய தினம் மாலை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri