இலங்கையில் மற்றுமொரு தொகுதியினருக்கு கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானம்
அரசாங்க மற்றும் தனியார் பராமரிப்பு நிலையங்களில் உள்ள சிறுவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு ஒன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சர் இது தொடர்பில் முன்வைத்த அமைச்சரவைப் பத்திரம் ஒன்றிற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.

மாதாந்தம் வழங்கப்படவுள்ள தொகை
அதன் பிரகாரம் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் வீதியோரங்களில் வாழும் சிறுவர்களுக்கு மாதாந்தம் ஐயாயிரம் ரூபா வீதம் வழங்கப்படவுள்ளது.
அவற்றில் மூன்றாயிரம் ரூபாவை அவர்கள் தங்கி வாழும் பராமரிப்பு நிலையங்களுக்கு வழங்கவும் மிகுதி இரண்டாயிரம் ரூபாவை சிறுவர்களின் எதிர்கால நலன் கருதி சேமிப்புத் திட்டம் ஒன்றில் வைப்புச் செய்யவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சேமிப்பு வங்கியின் ஒத்துழைப்பு
அதற்காக தேசிய சேமிப்பு வங்கியின் ஒத்துழைப்பையும் அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri