சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சபாநாயகரின் செயற்பாடுகள்!
நாடாளுமன்றில், அமைச்சர் வசந்த சமரசிங்க பேசுவதற்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அனுமதி மறுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையே நடந்த வாக்குவாதத்தின் போது, இது நிகழ்ந்ததுள்ளது.
இதன்போது, சபாநாயகர் அமைச்சரை அமர உத்தரவிட்டார். இது சபாநாயகர் தனது சொந்த கட்சி உறுப்பினருக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
செயற்பாடுகள்
அண்மையிலும், பிரதமரின் ஒலிவாங்கியை சபாநாயகர், நிறுத்தியதாக, சபை முதல்வர் பிமல் ரட்நாயக்க குற்றம் சுமத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேற்றைய அமர்வில், எந்த ஒழுங்கு பிரச்சினையும் இல்லை என்று கூறிய சபாநாயகர், எதிர்க்கட்சியினரை பேச அனுமதிக்க மறுத்துவிட்டார்.
அதேநேரம், அமைச்சர் வசந்த சமரசிங்க ஒரு கருத்தை தெரிவிக்க முயன்றார், ஆனால் சபாநாயகர் அவரை அமருமாறு உத்தரவிட்டார்.
