வாகரையில் ஐந்தாவது கோவிட் சிகிச்சை நிலையம் திறப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் தொற்றினை கருத்தில் கொண்டு அரசின் ஆலோசனைக்கு அமைவாக 1000 கட்டில் தயார்ப்படுத்தும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் நோயாளிகளுக்காக கோவிட் சிகிச்சைப்பிரிவு வாகரை மாவட்ட வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இடை நிலை வைத்திய நிலையம் என அழைக்கப்படும் தரம் -111 இற்கான திறப்பு விழாவில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.ஆர்.எம்.தௌபிக், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன், மாவட்டத்தில் கடமையாற்றும் சுகாதார வைத்தியர்கள், இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்தாவது கோவிட் சிகிச்சை நிலையமாக இது திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை, காத்தான்குடி, கல்லாறு மற்றும் கரடியனாறு ஆகிய
வைத்தியசாலைகளில் கோவிட் சிகிச்சை விடுதிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி
நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.





இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 19 மணி நேரம் முன்
வெளிவரப்போகும் குணசேகரன் ஈஸ்வரியை தாக்கிய வீடியோ, எப்படி தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri