உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியினால் வரலாறு காணாத சாதனை படைத்த கூகுள் நிறுவனம்
கூகுள் தளம் தொடங்கப்பட்ட 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக ட்ராஃபிக்கை FIFA உலகக்கோப்பை கால்ப்பந்து இறுதிப்போட்டியின் போது பதிவு செய்துள்ளதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு உலகம் முழுவதும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியைப் பார்த்த நிலையில் கூகுள் தேடுதல் தளம் வரலாறு காணாத சாதனை படைத்துள்ளது.
காத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் பிரான்ஸ் அணியும் அர்ஜெண்டினா அணியும் மோதியிருந்ததுடன், பிரான்ஸ், ஆர்ஜெண்டினா இரண்டு அணிகளும் தலா 3 கோல் அடித்து பெனால்டியில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில், நட்சத்திர வீரரான மெஸ்ஸி இந்த ஆட்டத்தில் பங்கேற்றிருந்ததுடன், மெஸ்ஸியின் கனவு ஞாயிற்றுக்கிழமை நனவாகியுள்ளது.
இந்த விறுவிறுப்பான போட்டியின் எதிரொலியாகக் கூகுள் தளத்தில் கடந்த 25 வருடத்தில் கண்டிராத வகையில் அதிகப்படியான தேடல் வந்துள்ளதாகக் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த உலக மக்களுக்கும் FIFA உலகக்கோப்பை குறித்து தேடியுள்ளனர் எனவும் சுந்தர் பிச்சை தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
Search recorded its highest ever traffic in 25 years during the final of #FIFAWorldCup , it was like the entire world was searching about one thing!
— Sundar Pichai (@sundarpichai) December 19, 2022