FIFA தலைவரின் மூத்த ஆலோசகர் பதவி விலகல்
FIFA தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவின் மூத்த ஆலோசகர் கர்லோஸ் கோர்டேரோ உடனடியாகத் தனது பதவி விலகியுள்ளார்.
FIFA உலகக் கிண்ணம் மற்றும் பிற தொடர்களை நடத்த 'FIFA Forward Enterprise' என்ற 20 பில்லியன் டொலர் மதிப்புள்ள துணை நிறுவனத்தை உருவாக்கி, அதில் 20 சதவீத பங்கை தனியார் முதலீட்டு நிறுவனங்களுக்கு விற்க FIFA திட்டமிட்டுள்ளது.
FIFA தலைவர் பதவி விலகல்
இந்தத் திட்டத்திற்கு செப்டெம்பர் 19-க்குள் அனுமதி அளிக்கும் ஒவ்வொரு உறுப்பினர் சங்கத்திற்கும் தலா 40 மில்லியன் டொலர் வழங்கப்படும் என இன்ஃபான்டினோ அறிவித்துள்ளார்.
முன்னாள் அமெரிக்க சாக்கர் சம்மேளன துணைத் தலைவரான கர்லோஸ் கோர்டேரோ, இது கால்பந்து விளையாட்டின் எதிர்காலத்தை அடகு வைக்கும் மோசமான ஒப்பந்தம் எனக் கூறி பதவி விலகியுள்ளார்.

ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் (UEFA) இத்திட்டத்திற்கு மிகக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. FIFA விளையாட்டின் ஆன்மாவை விற்பனை செய்ய முயல்வதாகக் கூறி, உலகக் கிண்ணம் உள்ளிட்ட FIFA தொடர்களைப் புறக்கணிக்கப்போவதாகவும் எச்சரித்துள்ளது.
இதேபோல் வட அமெரிக்க மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்புகளும் (AFC) இத்திட்டத்திற்குத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன. எதிர்ப்புகள் வலுத்துவரும் நிலையிலும், 211 உறுப்பினர் சங்கங்களின் ஜனநாயகப்பூர்வ வாக்களிப்பு மூலமே முடிவு எடுக்கப்படும் என FIFA தெரிவித்துள்ளது.
மேலும், நாங்கள் கால்பந்தையோ அல்லது உலகக் கிண்ணத்தையோ விற்பனை செய்யவில்லை என்றும், விளையாட்டின் வணிக வாய்ப்புகளை உலக அளவில் மேம்படுத்தவே முயல்கிறோம் என்றும் FIFA தெளிவுபடுத்தியுள்ளது.
உலகக் கோப்பை புறக்கணிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்? FIFA-வின் சர்ச்சைக்குரிய புதிய திட்டம் News Lankasri