உலகக் கிண்ண பங்குகளை தனியாருக்கு விற்கும் FIFA திட்டம்..! AFC தலைவர் கடும் எதிர்ப்பு
உலகக் கிண்ணக் கால்பந்து போட்டியின் பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யும் FIFA அமைப்பின் திட்டத்திற்கு ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் (AFC) தலைவர் ஷேக் சல்மான் பின் இப்ராஹிம் அல் கலீஃபா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தங்களைக் கலந்தாலோசிக்காமல் முடிவெடுத்தது "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று" என்றும் அவர் குற்றம் சாடியுள்ளார். FIFA அமைப்பு தனது உலகக் கிண்ணத் தொடர் மற்றும் பிற தொடர்களை நடத்துவதற்காக 20 பில்லியன் டொலர் மதிப்பிலான வணிக துணை நிறுவனத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக நேற்றுமுன்தினம் (28.07.2026) அறிவித்தது.
இந்த அறிவிப்பு தங்களுக்கு பெரும் அதிர்ச்சியளிப்பதாக ஆசிய கால்பந்து சம்மேளனம் உள்ளிட்ட பிராந்திய கால்பந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன.
FIFA அமைப்பின் திட்டத்திற்கு உறுப்பு நாடுகள் மறுப்பு
இது குறித்து 47 உறுப்பு நாடுகளுக்கு ஷேக் சல்மான் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, "இந்தத் திட்டம் குறித்து எந்தவொரு நிலையிலும் ஆசிய கால்பந்து சம்மேளனத்துடன் FIFA அமைப்பு கலந்தாலோசிக்கவில்லை என்பதை மிகுந்த கவலையுடனும் ஏமாற்றத்துடனும் சுட்டிக்காட்டுகிறோம்.

மேலும், இத்திட்டத்தின் நிதி, சட்டம் மற்றும் நிர்வாக ரீதியான எந்தவொரு விரிவான விளக்கத்தையும் FIFA வழங்கவில்லை. FIFAவின் இந்த ஒருதலைப்பட்சமான நடவடிக்கை, பிராந்திய கால்பந்து கூட்டமைப்புகளின் ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகிய அடிப்படைத் தூண்களையே தகர்ப்பதாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் 19ஆம் திகதிக்குள் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தால், ஒவ்வொரு உறுப்பு நாட்டிற்கும் 40 மில்லியன் டொலர் வழங்கப்படும் என FIFA தலைவர் ஜியான்னி இன்ஃபான்டினோ அறிவித்திருந்தார்.
இருப்பினும், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திட்டத்திற்கு மிகக் குறைந்த அவகாசம் வழங்கப்பட்டிருப்பது வியப்பளிப்பதாகவும், FIFAவுடன் மேலும் பேச்சுவார்த்தை நடத்தும் வரை உறுப்பு நாடுகள் இந்த திட்டம் தொடர்பில் எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டாம் என்றும் ஷேக் சல்மான் கேட்டுக்கொண்டுள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 5 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam