புதிய கண்ணீர் புகைக் குண்டுகளைக் கொள்வனவு செய்யும் பொலிஸார் !
புதிய கண்ணீர் புகைக் குண்டுகளை கொள்வனவு செய்ய பொலிஸார் தீர்மானித்துள்ளனர். தற்போது கையிருப்பில் உள்ள கண்ணீர் புகைக் குண்டுகளைப் பரிசோதிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு பரிசோதித்து பயன்பாட்டிற்கு உதவாத குண்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அடுத்த ஆண்டிற்காகப் புதிய கண்ணீர் புகைக் குண்டுகளை இறக்குமதி செய்ய விலை மனுக்கள் கோரப்படவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கண்ணீர் புகைக் குண்டுகள் பயன்படுத்தப்படாமல் நீண்ட காலம் சேமித்து வைக்கப்பட்டால், அவை காலாவதியாகிச் செயலிழந்துவிடும் என தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே தற்போது கையிருப்பில் உள்ள கண்ணீர் புகைக் குண்டுகள் இவ்வாறு பரிசோதிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.