பெரும்போக நெற்செய்கை விவசாயிகளுக்கான மானிய உரக் கொடுப்பனவு வைப்பிடும் பணிகள்
கிளிநொச்சி மாவட்டத்தில் 2025 - 2026 பெரும்போக நெற்செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கான மானிய உரக் கொடுப்பனவுகள் வங்கியில் வைப்பிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுக்குளம் உள்ளிட்ட பாரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசன குளங்களின் கீழான வயல் நிலங்களிலும் மானாவாரி வயல் நிலங்களிலும் உள்ளடங்களாக சுமார் எழுபதாயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வாண்டு பெரும் போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொடுப்பனவு வைப்பிலிடும் பணி
இந்த நிலையில் அரசாங்கத்தினால் விவசாயிகளுக்காக வழங்கப்படும் மானிய உரக் கொடுப்பனவுகள் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வைப்பிலிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அந்த அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பத்து கமநல சேவை நிலையங்கள் ஊடாகவும் கெக்ரேயர் ஒன்றுக்கு இருபத்தையாயிரம் ரூபா வீதம் இரண்டு கட்டங்களாக பெரும் போக நெற்செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கான மானிய உர கொடுப்பனவுக்குரிய பணம் வங்கிகளில் வைப்பில் இடப்படும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக கடந்த 16ஆம் திகதி முதல் உரமானிய கொடுப்பனவுக்கான பணம் வைப்பிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பணம்
அந்த அடிப்படையில் ஆறாயிரத்து 256 விவசாயிகளுக்கு 4649.175 ஹெக்டேயருக்குரிய பணம் இதுவரை வைப்பிலிடப்பட்டுள்ளன.
தொடர்ந்து ஏனைய விவசாயிகளுக்கான மானிய உரக் கொடுப்பனவுகள் வங்கி கணக்குகளில் வாய்ப்பிலிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |