பெண் நிருபரின் உயிரிழப்பினால் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு வலுக்கும் எதிர்ப்பு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வாகனத்தில் சிக்கி பெண் நிருபர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், பேரணி இரத்து செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டின் ஐ.எஸ்.ஐ. உளவு பிரிவு அமைப்பின் இயக்குனர் ஜெனரலை விமர்சித்து இன்று 3 ஆவது நாள் பேரணியை நடத்தியுள்ளார்.
இதன்போது செய்தி சேகரிப்பிற்கு சென்ற பெண் நிருபர் சடாப் நயீம் என்பவர் இம்ரான் கானின் பிரசார வாகனத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.இதனால், அதிர்ச்சியடைந்த இம்ரான் கான் தனது பேரணியை இரத்து செய்துள்ளார்.

இம்ரான் கானின் பேரணி இரத்து
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இன்றைய எங்களது பேரணியில், பெண் நிருபர் சடாப் நயீம் பயங்கர விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பற்றி அறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த சோகமும் அடைந்தேன்.
எனது வருத்தங்களை விபரிக்க வார்த்தைகள் எதுவும் இல்லை. இந்த சோக தருணத்தில் அவரது குடும்பத்தினருக்காக வேண்டி கொள்கின்றேன். இரங்கல் தெரிவிக்கின்றேன். இன்றைய எங்களது பேரணியை நாங்கள் ரத்து செய்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan