சாரதியின் கவனயீனம்! நூலிழையில் உயிர் தப்பிய பெண் பயணி
காலி - வக்வெல்ல வீதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பிலான காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
குறித்த விபத்தானது சாரதியின் கவனயீனத்தால் இடம்பெற்றிருந்த நிலையில், விபத்தில் பாதிக்கப்பட்ட பெண் நூலிழையில் உயிர் தப்பிய நிலையையும் காணொளியில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
நாட்டில் தற்போது சாரதிகளுக்கான போக்குவரத்து நடைமுறைகள் குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றன.
சாரதிகளின் நடைமுறை
குறிப்பாக மக்களின் பாதுகாப்பு நடைமுறைகளை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.
இலங்கையில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வீதி விதி ஒருங்குமுறைகள் தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன.
இதில் குறிப்பாக பேருந்து சாரதிகளின் நடைமுறைகள் தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
@lankasrinews சாரதியின் கவனயீனம்! நூலிழையில் உயிர் தப்பிய பெண் பயணி! #KaliVakkawellaAccident #TrafficAccident #RoadSafety #DistractedDriving #AccidentFootage #WomanSurvives #TrafficRules #PublicAwareness #SriLankaNews #SocialMediaBuzz
♬ original sound - Lankasri News
கடந்த சில நாட்களாக நாட்டில் இடம்பெற்ற பாரிய பேருந்து விபத்துக்களுக்கு சாரதிகளின் கவனயீனமும் காரணமாகியிருந்தன.
இவ்வாறான கவனயீனத்துடன் செயற்படும் பேருந்து சாரதிகள் தொடர்பில் சில முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு, போக்குவரத்து பொலிஸாரால் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.
இவ்வாறன பின்னணியில் நேற்று காலி - வக்வெல்ல வீதியில் இடம்பெற்ற விபத்து குறித்த காணொளி சமூக ஊடகங்களின் கவனத்தை பெற்றுள்ளது.
நீர் தேங்கி வெள்ள நிலை
குறித்த வீதியில் பயணித்த தனியார் பேருந்தானது ஒரு பெண் இறங்குவதற்கு முன்னர் புறப்பட ஆரம்பித்த நிலையில் அவர் நிலைத்தடுமாறி கீழே விழும் காட்சி காணொளியில்பதிவாகியுள்ளது.
மேலும் மழை காரணமாக வீதியில் நீர் தேங்கி வெள்ள நிலை உருவாகிய நிலையிலேயே குறித்த பெண் நிலைத்தடுமாறி அதில் விழுந்துள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் பெரும் விமர்சனத்துக்குளாளகியுள்ளதுடன் சாரதி தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என சமூக ஆர்வளர்களால் கோரப்பட்டு வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



