பிள்ளைகளுடன் உணவருந்திய தந்தை சுட்டுக்கொலை - தென்னிலங்கையில் நடந்த பயங்கரம்
களுத்துறை, கட்டுகுருந்தவில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், அவரது 7 வயது மகள் காயமடைந்துள்ளார். அசுருமுனி தஸ்மின் மதுவந்த சில்வா என்ற 38 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் கட்டுகுந்தா புகையிரத நிலைய வீதியிலுள்ள தனது இல்லத்தில் இருந்து தனது மூன்று பிள்ளைகளுடன் இரவு உணவு அருந்திக் கொண்டிருந்த போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

T-56 ரக துப்பாக்கியால் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் கொலை உட்பட பல குற்றச் செயல்களில் ஈடுபட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் களுத்துறை பிரதேச குற்றப் பிரிவு புலனாய்வு நிலைய அதிகாரிகள், களுத்துறை குற்றப் பிரிவு, பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு, களுத்துறை, பயகல, பேருவளை நிலையத் தளபதிகள் மற்றும் விசேட பொலிஸ் குழுக்கள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri