பிள்ளைகளை கொலை செய்துவிட்டு இளம் தந்தை எடுத்த விபரீத முடிவு! பின்னணியில் வெளியான காரணம்
அரநாயக்க, பொலம்பேகொட பிரதேசத்தில் சடலமாக மீட்கப்பட்ட தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகளின் மரணம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாய் மற்றும் தந்தைக்கிடையில் கடந்த சில காலமாக இடம்பெற்று வந்த தகராறு இந்த கொலைக்கான காரணம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
கொலைக்கான காரணம்
குழந்தைகளின் தாய் தனது கணவரின் எதிர்ப்பினை மீறி வெளிநாடு செல்ல முற்பட்ட போது இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் தனது மனைவியை தந்தை வீட்டிலிருந்து தன்னோடு வருமாறு பல தடவை அழைத்தும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் பின்னரே அவர் தனது ஆறு வயது மகனையும், ஒன்பது வயது மகளையும் கொன்றுவிட்டு கொதிகமுவ பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மாவனல்லை பதில் நீதவான் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும், கேகாலை பொது வைத்தியசாலையின் உதவி சட்ட வைத்திய அதிகாரியும் சம்பவ இடத்தில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதற்கமைய, முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் பிரேத பரிசோதனையை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 1 மணி நேரம் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
