உயிரை மாய்த்துக் கொண்ட மகன் - மன வேதனையில் தந்தை மரணம்
கேகாலையில் பாடசாலை மாணவர் ஒருவர் வீட்டில் உள்ள மின்கம்பத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். இதனை அறிந்த தந்தையும் தன்னுயிரை மாய்த்தள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கேகாலை ரங்வல ஜபுன்வல பகுதியில் நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மகனின் விபரீத முடிவு
இந்த ஆண்டு க.பொ.த சாதாரன தர பரீட்சை எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்த 17 வயது மாணவனே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.
உயிரை மாய்த்து கொள்வதற்கு முன் அவர் எழுதிய கடிதம் ஒன்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். காதல் தொடர்பினால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மாணவன் உயிரை மாய்த்துள்ளமை தெரியவந்துள்ளது.
தந்தை மரணம்
53 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், பொற்கொல்லராக செயற்பட்டு வருகின்றார்.
குடும்பத்தில் இரண்டாவது மகன் உயிரை மாய்த்தமையினால், மனவேதனையில் இரசாயன திரவத்தை பருகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.