பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தமிழ் மக்களுக்காக ஒலித்த குரல்! யார் இந்த அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ

Batticaloa Northern Province of Sri Lanka
By Kumar Jun 06, 2025 04:45 PM GMT
Report
Courtesy: அருட்பணி நவாஜி, திருகோணமலை மறைமாவட்டம்.

புதிய இணைப்பு 

பிறப்பும், இளமையும்:

அருட்பணி மார்ஷல் கிறிஸ்ரி (சந்திரா) பெர்னாண்டோ அடிகளார் 09.08.1941ஆம் ஆண்டில் கொழும்பு நகரில் பிறந்தவராயினும் மட்டக்களப்பு நகரின் மையமாகிய புளியந்தீவு பெர்னாண்டோ வீதியிலே தனது குழந்தைப்பருவம் முதல் வளர்ந்தவராவார்.

இவரது தந்தையார் பெயர் கிறிஸ்ரி பிலிப்ஸ் பெர்னாண்டோ ஆகும். இவரது தாயார் பெயர் இக்னேஷியா அந்தோனிப்பிள்ளை ஆகும். தனது ஆரம்பக் கல்வியினை மட்டக்களப்பு புனித மரியாள் பாடசாலையில் தொடங்கிய இவர், தனது எஸ். எஸ். சி. தோற்றும் வரையிலும் அங்கேயே கல்வி கற்றார்.

பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தமிழ் மக்களுக்காக ஒலித்த குரல்! யார் இந்த அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ | Father Chandirra 37Th Memorial Held

இவரது திருமுழுக்கு பெயர் மார்ஷல் கிறிஸ்ரி பெர்னாண்டோ ஆகும். ஆயினும் இன்று வரையில் அவரோடு தொடர்புபட்ட மக்களுக்கு தெரிந்த பெயர் அருட்பணி சந்திரா பெர்னாண்டோ அடிகளாகும். வீட்டில்'சந்திரன்'என்று அழைக்கப்பட்ட இவரது பெயர் காலப் போக்கில் சந்திராவாக மாறி அதுவே குருவான பிற்பாடு சந்திரா பெர்னாண்டோவாக நிலைத்தும் விட்டது.

டக்ளஸுடன் இணையும் சுமந்திரன் - மணிவண்ணன்

டக்ளஸுடன் இணையும் சுமந்திரன் - மணிவண்ணன்

குருத்துவ அழைப்பும், உருவாக்கமும்:

குருத்துவ உருவாக்கல் பயிற்சி மற்றும் கல்வியினைத் தொடரும் நோக்கில் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள மங்கள10ரூ (மங்கள10ர்) புனித வளனார் (ஜோசப்) பெரிய குருமடத்தில் யூன் 1963இல் இணைந்து கொண்டார்.

அங்கே உயர் கல்வியினையும், புகுமுக மெய்யியல் கல்வியினை நிறைவு செய்த பிற்பாடு மெய்யியல் பட்டக் கல்வியினை 1966 – 1968 வரையிலான காலப்பகுதியில் கற்று நிறைவு செய்தார்.

அதன் பிற்பாடு தனது இறையியல் பட்டக் கல்விக்காக இந்தியாவின் தமிழ்நாடு சென்னையிலுள்ள பூவிருந்தமல்லி திரு இருதயக் குருத்துவக் கல்லூரியில் 1968இல் இணைந்து கொண்டு 1972இல் அக்கல்வியினை பூர்த்தி செய்தார்.

அங்கு பயிற்சி பெறுகின்ற காலத்தில் 03.04.1971இல் சென்னை – மயிலை (மட்ராஸ் - மயிலாப்பூர்) உயர்மறைமாவட்டத்தின் அன்றைய ஆயர் அமரர் பேரருட்திரு அந்தோனி இராயப்பா அருளப்பாவினால் திருத்தொண்டராக பூவிருந்தமல்லி குருமடத்தில் திருநிலைப்படுத்தப்பட்டார்.

தனது குருத்துவக் கல்வியினை பூர்த்திசெய்து நாடு திரும்பியபோது, 21.09.1972இல் அன்றைய திருகோணமலை – மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் ஆயர் அமரர் பேரருட்திரு இக்னேஷியஸ் கிளேனி (இயேசு சபை) ஆண்டகையினால் குருவாக புளியந்தீவு புனித மரியாள் இணைப்-பேராலயத்தில் திருநிலைப்படுத்தப்பட்டார்.

மாவையை படுகொலை செய்ய முயன்ற டக்ளஸ்: சிறீதரன் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

மாவையை படுகொலை செய்ய முயன்ற டக்ளஸ்: சிறீதரன் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

குருத்துவமும் பணி வாழ்வும்:

24.03.1972இல் திருத்தொண்டராக நாடு திரும்பிய போது, புனித வார திருச்சடங்குகளில் புளியந்தீவு புனித மரியாள் இணைப்-பேராலயத்திலும் அதனைத் தொடர்ந்துவந்த காலப்பகுதியில் தாண்டவன்வெளி புனித காணிக்கை அன்னை ஆலயப் பங்குத்தந்தை அமரர் அருட்பணி சைமன் பெர்னாண்டோ அடிகளாருக்கு உதவியாகப் பணியாற்றினார்.

குருத்துவ திருநிலைப்படுத்தலின் பிற்பாடு (21.09.1972), திருகோணமலை புனித மரியாள் பேராலயத்தின் உதவிப் பங்குத்தந்தையாக 01.11.1972இல் நியமிக்கப்பட்டார்.

பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தமிழ் மக்களுக்காக ஒலித்த குரல்! யார் இந்த அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ | Father Chandirra 37Th Memorial Held

தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள் அங்கு பணியாற்றிய பிற்பாடு 01.09.1976இல் திருகோணமலை குவாடலூப்பே (சின்னக்கடை) அன்னை ஆலயத்தின் பங்குத் தந்தையாக நியமிக்கப்பட்டார். அங்கு இரண்டு ஆண்டு காலம் பணியாற்றினார்.

இக்கால கட்டத்தில் மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தின் (Senate) உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

திருகோணமலை மறைக்கோட்டத்தில் தனது பணியினை நிறைவுசெய்து மட்டக்களப்பு மறைக்கோட்டத்திற்கு 1978ஆம் ஆண்டில் வருகை தந்தார்.

01.11.1978இல் திருகோணமலை – மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் நிதிப் பொறுப்பாளராக பணிப்பொறுப்பினை ஏற்று மட்டக்களப்பில் தனது பணியினை ஆரம்பித்தார்.

அக்கால கட்டத்தில், 1979ஆம் ஆண்டில் கல்லாறு புனித அருளாநந்தர் ஆலயத்தின் பங்குத் தந்தையாகவும் புதிய பணிப்பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.

இப்பணியில் 1984ஆம் ஆண்டு வரையில் ஐந்து ஆண்டுகள் பணி புரிந்தார். அதற்கு மேலதிமாக 1981ஆம் ஆண்டில் கல்முனை மறைக்கோட்டத்தின் பதில் முதல்வராக நியமிக்கப்பட்டார்.

1984ஆம் ஆண்டில் புளியந்தீவு புனித மரியாள் இணைப்-பேராலயத்தின் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார். தனது தாய்ப்பங்கில் பணியாற்றுகின்ற வாய்ப்புக் கிட்டியபோதும் அது நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. 06.06.1988இல் கொடிய துப்பாக்கிதாரிகளால் தமது பங்குப் பணிமனை இல்லத்தில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டு அவரது குருத்துவப் பணிவாழ்வு இடைநடுவில் நிறைவுக்கு வந்தது.

வாழ்வின் இறுதிக்காலம்:

1984இல் புளியந்தீவு புனித மரியாள் இணைப்-பேராலயத்தில் பங்குத் தந்தையாக பணிப் பொறுப்பினையேற்ற காலத்தில், 1985ஆம் ஆண்டிற்கு பிற்பாடு மட்டக்களப்பில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.

இராணுவ, துணை இராணுவக் குழக்கள், புலனாய்வுப் பிரிவினர், தொடர்ந்து வந்த இந்திய அமைதி காக்கும் படையினர் போன்றவர்களால் பெரும்பாலான தமிழ் மக்களின் வாழ்வு, அதிலும் குறிப்பாக கிராமப் பகுதிகளில் வாழ்கின்ற தமிழ் மக்களின் வாழ்வு கேள்விக்குறியாகியது. யாருமற்ற அனாதைகளாக மக்கள் கைவிடப்பட்டார்கள். அவர்களுக்காக பேசுவதற்கான அரசியல் தலைமைகளும் அற்றுப் போயின.

மக்களின் நாளாந்த வாழ்வே பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்த காலநேரமது. அக்காலகட்டத்தில் துன்புறுத்தப்படும் மக்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்பாக மாறியதுதான் மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் குழு (Batticaloa District Citizen's Committee).

அக்குழுவின் தலைவராக அருட்பணி சந்திரா பெர்னாண்டோ அடிகளார் பலத்த சவால்கள், அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தளராது பணியாற்றினார்.

கைதுகள் செய்யப்பட்ட அப்பாவிகளுக்காக தனது உயிரையும் துச்சமென மதித்து இராணுவ முகாம்களுக்குச் சென்று அவர்களின் விடுதலைக்காக பரிந்து பேசினார்.

அவரது செயல்களும், நடவடிக்கைகளும் அவரை எதிர்த்தோருக்கு சவாலாக மாறியது. அது அவரது படுகொலை வரையிலும் சென்றது. 06.06.1988இல் மாலை மங்கிய வேளையில் தனது பங்குப் பணிமனையில் வீற்றிருந்த வேளையில் ஆயுதம் தரித்த அடையாளம் தெரியாத நபர்களால் அவரது பணிமனை அலுவலகத்திலேயே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

அக்காலகட்டத்தில் இலங்கையின் வடக்கு – கிழக்குப் பிரதேசங்களில் இந்திய அமைதி காக்கும் படையினர் நிலைகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது படுகொலையினூடாக அவரது குருத்துவப் பணிவாழ்வானது 16வது வருடத்தில் பயணிக்கின்றபோது சடுதியாக நிறுத்தப்பட்டது.

இவரது துர்ப்பாக்கிய மரணமே கிழக்கு மாகாணத்தில், திருகோணமலை – மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் நிகழ்ந்த முதலாவது கத்தோலிக்க குருவானவரின் யுத்தகாலப் படுகொலையாகும். அவரது கொடூர மரணத்தால் மறைமாவட்டம் மட்டுமல்ல, முழு மட்டக்களப்பு மாவட்டமே நிலைகுலைந்து போனது. 

அடிகளாரின் இறுதி அடக்கச்சடங்கானது பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் 08.06.1988இல் அன்றைய மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை மற்றும் அன்றைய ஒய்வுநிலை ஆயர் அமரர் லீயோ இராஜேந்திரம் அன்ரனி ஆகியோரின் தலைமையில் பல குருக்களுடன் இணைந்து புனித மரியாள் இணைப்-பேராலயத்தில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

பின்னர் பூதவுடல் பவனியாக வெபர் (மத்திய) வீதி, புனித அந்தோனியார் வீதி, அந்தோனியார் ஆலயத்தில் சிறிது நேரம் வைக்கப்பட்டு புனித மிக்கேல் கல்லூரி வீதி வழியாக மீளவும் இணைப்பேராலய வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டு, வளாகத்தின் லூர்து கெபிக்கு அருகில்'சமாதானத்தின் காவலன்'எனும் நாமத்துடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நீதியின் குரலாய் ஒலித்த அருட்பணி சந்திரா பெர்னாண்டோ அடிகளார் என்றும் மக்கள் மனங்களில் வாழும் உன்னத குருவானவரே! 

முதலாம் இணைப்பு 

மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல் புனித மரியாள் தேவாலயத்தில் உள்ள அருட்தந்தையின் சமாதியில் இன்று(6) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

பிள்ளையான் - கருணாவையும் சி.வி.கே.சிவஞானம் விரைவில் சந்திக்கலாம்!

பிள்ளையான் - கருணாவையும் சி.வி.கே.சிவஞானம் விரைவில் சந்திக்கலாம்!

37வது ஆண்டு நினைவேந்தல்

பல்சமய ஒன்றியத்தின் செயலாளர் அருட்தந்தை க.ஜெகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல்சமய ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ சிவபாலன் குருக்கள்,ஜேசுசபை துறவி அருட்தந்தை ஜோசப்மேரி அடிகளார்,கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் அருட்தந்தை நவரெட்னம் அடிகளார் சிவில் சமூக செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ உட்பட அருட்தந்தையர்கள், அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோவின் குடும்ப உறுப்பினர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தமிழ் மக்களுக்காக ஒலித்த குரல்! யார் இந்த அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ | Father Chandirra 37Th Memorial Held

இதன்போது அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் சமாதியிலும் மலரஞ்சலி செலுத்தப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து நினைவுரைகள் நடைபெற்றன.

1988ஆம் ஆண்டு ஜுன் மாதம் 06ஆம் திகதி இந்திய இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட ஆயுதக்குழு ஒன்றினால் மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் வைத்து அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ சுட்டுக்கொல்லப்பட்டார்.

வவுனியாவில் கணவனால் கொல்லப்பட்ட ஆசிரியரின் இறுதி கிரியை: சோகமயமான கிராமம்

வவுனியாவில் கணவனால் கொல்லப்பட்ட ஆசிரியரின் இறுதி கிரியை: சோகமயமான கிராமம்

வடக்கு-கிழக்கில் நீதி

தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டம் இலக்கு நோக்கி பயணிக்க ஆரம்பித்த காலத்தில், ஆக்கிரமிப்புப் படையினரால் மக்கள் அழிக்கப்பட்டார்கள், சுற்றிவளைப்புக்கள், கைது செய்து விசாரணையின்றி அடைத்து வைத்தல் போன்ற பல்வேறு மக்களின் துன்ப துயரங்களிற்கு எதிராக இவர் துணிந்து களத்தில் நின்று குரல்கொடுத்துவந்தார்.

பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தமிழ் மக்களுக்காக ஒலித்த குரல்! யார் இந்த அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ | Father Chandirra 37Th Memorial Held

அருட்தந்தை சந்திரா பெர்ணாண்டோ தமிழ் தேசிய விடுதலையை உள்ளுணர்வோடு நேசித்ததனால் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் ஏற்றுக் கொண்டவராக காணப்பட்டதுடன் ஆயுதக்குழுக்களினால் முன்னெடுக்கப்பட்டுவந்த செயற்பாடுகளுக்கு எதிராகவும் செயற்பட்டுவந்தார்.

வடக்கு-கிழக்கில் நீதிக்காகவும் உண்மைக்காகவும் 11அருட்பணியாளர்கள் தமிழர் தாயகத்தில் படுகொலைசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் செயலாளர் அருட்தந்தை க.ஜெகதாஸ் தெரிவித்தார்.

புலிகளுக்கு பயிற்சி வழங்கிய இஸ்ரேலுக்கு அரசாங்கம் ஏன் ஆதரவு வழங்குகின்றது - முஜிபுர் ரஹ்மான்

புலிகளுக்கு பயிற்சி வழங்கிய இஸ்ரேலுக்கு அரசாங்கம் ஏன் ஆதரவு வழங்குகின்றது - முஜிபுர் ரஹ்மான்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம் கிழக்கு

08 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US