முல்லைத்தீவில் தந்தையால் 11 வயது மகளுக்கு நேர்ந்த துயரம்
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தனது மகளை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்திய தந்தை நேற்றிரவு (06.03.2024) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
செல்வபுரம் கிராமத்தை சேர்ந்த 34 வயதான நபரொருவரே தனது 11 வயது மகளை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்திய
நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
கூலித் தொழிலாளியான குறித்த தந்தை கடந்த மூன்று வருடங்களாக தனது மகளை தவறதான செயற்பாட்டிற்கு உட்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி தந்தையின் கொடூர செயலை தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தாயார் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து நேற்று (06) சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுமியை முல்லைத்தீவு மாவட்ட வைத்திசாலையில் அனுமதித்துள்ளனர்.
மேலும் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri