புதுக்குடியிருப்பு விசுவமடு பகுதியில் தந்தை - மகன் கைது
புதுக்குடியிருப்பு விசுவமடு பகுதியில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய தந்தை, மகன் என இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் புதுக்குடியிருப்பு விசுவமடு 10ஆம் கட்டை பகுதியில் உறவினர்களால் வீட்டுத் தளபாடங்கள், மோட்டார் சைக்கிள் என்பன களவாடப்பட்டிருந்தது.
மேலதிக விசாரணை
குறித்த திருட்டு சம்பவம் தாெடர்பாக வீட்டு உரிமையாளர்களால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் போடப்பட்ட முறைப்பாட்டுக்கமைய புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் குறித்த திருட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் திருடிய பொருட்களுடன் நேற்றையதினம் (03) கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய புன்னை நீராவி விசுவமடுவில் வசிக்கும் தந்தை (72வயது), மகன் (24வயது) கைது செய்யப்பட்டதுடன் , திருடப்பட்ட பாெருட்களும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் களவெடுத்த பொருட்களுடன் முற்படுத்தப்பட உள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி: பெப்ரவரியில் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ட்ரிபிள் ஜாக்பாட் தான்! Manithan
கனடாவிலிருந்து பிரிய விரும்பும் மாகாணமொன்றின் மக்கள்: அமெரிக்க அதிகாரிகளை சந்தித்ததால் பரபரப்பு News Lankasri
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam