வவுனியாவில் கோர விபத்து : பெண் உட்பட இருவர் பலி - பலரது நிலை கவலைக்கிடம்
வவுனியா ஓமந்தை ஏ9 பிரதான வீதியில் நேருக்கு நேர் இருவாகனங்கள் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று(17) இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தேங்காய் சிதறுவதை போல சுமந்திரனும் சாணக்கியனும் சிதற வேண்டும்! கதவடைப்புக்கு விடுக்கப்பட்ட எதிர்ப்பு
வீதியின் போக்குவரத்து நடவடிக்கை
கண்டியில் இருந்து முல்லைத்தீவு நோக்கிப் யணித்த பொலிரோ ரக வாகனம் ஏ9 வீதியின் ஓமந்தை மாணிக்கர் வளவுப்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது பார ஊர்தியில் மோதி கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியது.
விபத்தின் போது குறித்த வாகனத்தில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 15ற்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர்.
விபத்தினால் வாகனத்தில் இருந்த அனைவரும் வீதியில் தூக்கிவீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்தில் இருவர் மரணமடைந்ததுடன் ஏனையோர் படுகாயமடைந்திருந்துள்ளனர்.
இதன்போது வீதியால் பயணித்த பொதுமக்களின் உதவியுடன் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிறுவன் ஒருவன் உட்பட மூவரின் நிலை கவலைக்கிடமாக
விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண் உட்பட இருவர் சாவடைந்துள்ளதுடன் 13பேர் காயமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 9பேர் பெண்கள் ஆறு பேர் சிறுவர்கள் ஆவர்.
உயிரிழந்தவர்கள் முல்லைத்தீவு விசுவமடு பகுதியை சேர்ந்த யாழினி வயது33 ,சுயன் வயது30 என்று தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த அனைவரும் ஒரே குடும்பங்களை சேர்ந்த உறவினர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் கண்டியில் இடம்பெற்ற மரணவீடு ஒன்றிற்கு சென்றுவிட்டு மீண்டும் விசுவமடு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதேவேளை படுகாயமடைந்த சிறுவன் ஒருவன் உட்பட மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்து தொர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை கருத்து News Lankasri
