வடக்கு–கிழக்குத் தழுவிய கடையடைப்புக்கு தமிழரசுக் கட்சியின் பிரித்தானிய கிளை கடும் எதிர்ப்பு
வடக்கு–கிழக்குத் தழுவிய கடையடைப்புக்கு ஆதரவை வழங்கவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம் என இலங்கை தமிழரசு கட்சியின் பிரித்தானிய கடும் கிளை தெரிவித்துள்ளது.
பிரித்தானிய கிளை வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்சியின் உட்புற ஆலோசனைகள்
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, முத்து ஐயன்கட்டு பகுதியில் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட குடும்பஸ்தருக்கு நீதி கோரி கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கதவடைப்பு போராட்டத்திற்கான அழைப்பு முறையான நடைமுறை ஒழுங்குகளை பின்பற்றாமல் விடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் பதில் தலைவர் மற்றும் பதில் பொதுச் செயலாளர் ஆகிய இருவரும் தனிப்பட்ட முறையில் இந்த அழைப்பை விடுத்துள்ளனர்.
கட்சியின் உட்புற ஆலோசனைகளையும், ஏனைய கட்சிகள், வர்த்தக சங்கங்கள், தொழிற்சங்கங்கள் போன்ற பொது அமைப்புக்கள் சிவில் சமூக அமைப்புக்கள் எதனுடனும் கலந்துரையாடாமல் தடுக்கப்பட்ட இத்தீர்மானம் இலங்கைத் தமிழரசு கட்சிக்குள் நிலவுகின்ற தன்னிச்சையானதும், சர்வாதிகார போக்கையுமே காட்டுகின்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடையடைப்புக்கு ஆதரவினை கோரும் வகையில் நேற்றையதினம் யாழ்ப்பாணம் வர்த்தக சங்கத்தினருக்கும் யாழ்ப்பாணம் மாநகர முதல்வருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெற்றது.
இதன்போது கடையடைப்புக்கு வர்த்தகர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

டிசம்பர் மாத சிறப்பு பலன்கள்: நான்காம் இடத்தில் உச்சம் பெறும் குரு! மேஷத்துக்கு ஜாக்பாட் உறுதி Manithan
வெண்ணிலா சொன்ன விஷயத்தை கேட்டு கடும் ஷாக்கில் கண்மணி, என்ன முடிவு எடுப்பார்.. அன்புடன் கண்மணி புரொமோ Cineulagam
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam