நல்லூர் திருவிழாவுக்காக யாழ் வந்த குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்
நல்லூர் திருவிழாவுக்காக கொழும்பில் இருந்து குடும்பத்துடன் யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவர் கட்டிலில் உறங்கிய வேளை நேற்று (15) காலை கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் வசிக்கும் சிவநாதன் சிவனேசன் (வயது 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீட்டில் உறங்கியவேளை
இது குறித்து மேலும் தெரியவருகையில் கொழும்பில் வசிக்கும் இவர் நல்லூர் ஆலய திருவிழாவுக்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு யாழ்ப்பாணத்துக்கு குடும்பமாக வந்து திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி பகுதியில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார்.
வீட்டில் கட்டிலில் உறங்கியவேளை நேற்றையதினம் (15) காலை திடீரென கட்டிலில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
இதன்போது நோயாளர்காவு வண்டிக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த நோயாளர்காவு வண்டி, அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்து திரும்பிச் சென்றது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தலைவனா அவன், முட்டாள்... தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பற்றி விமர்சித்த பிரபல இயக்குனர் Cineulagam
