உலகமே எதிர்ப்பார்த்த புடின் - ஜெலன்ஸ்கி சந்திப்பு: ஐரோப்பாவுக்கான முக்கிய செய்தி
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் இடையே ஒரு முத்தரப்பு உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ஆகியோருக்கிடையில் எதிர்வரும் திங்கட்கிழமை(18) ஓவல் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.
குறித்த பேச்சுவார்த்தை சிறப்பாக நடந்தால் முத்தரப்பு உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்யும் பணியில் ஈடுபடுவதாக ஐரோப்பிய தலைவர்களிடம் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இதேவேளை, டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் குறைந்தபட்சம் ஒரு ஐரோப்பிய தலைவராவது கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அலாஸ்கா மாகாணம்
இருப்பினும், குறித்த ஐரோப்பிய தலைவர் யார் என்பது குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளிவரவில்லை.
இதேவேளை, அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதி புடினை நேருக்கு நேர் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டு வருமாறு புடினுக்கு ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, சந்திப்பு இடம்பெற்ற அலாஸ்கா மாகாணம் ஒரு காலத்தில் ரஷ்யாவின் மாகாணமாக இருந்த நிலையில், அதனை பல்வேறு காரணங்களுக்காக அமெரிக்கா வாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
You may like this,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
Bigg Boss: மேடையிலேயே வாந்தி எடுத்து மாஸ் காட்டிய விஜய் சேதுபதி! அடுக்கி வைத்துள்ள ரெட் கார்டு Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam