யாழில் கோர விபத்து - தொடருந்தில் மோதி இளைஞன் உயிரிழப்பு
புதிய இணைப்பு
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம்(10) இடம்பெற்ற தொடருந்து விபத்தில், படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் உயிரிழந்தவர், கொட்டடி பகுதியை சேர்ந்த சிவராசா சிவலக்சன் எனும் 23 வயதுடைய இளைஞர் என்றும் தெரியவந்துள்ளது.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணத்தில் தொடருந்து - மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி நேற்றையதினம்(10.01.2026) பயணித்த சொகுசு தொடருந்துடன் அரியாலை 13ஆம் கட்டை பகுதியில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவையை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்ற இளைஞன் தொடருந்து மோதி விபத்திற்கு உள்ளாகினார்.
வைத்தியசாலையில் அனுமதி
இந்நிலையில் படுகாயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு, யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

குறித்த தொடருந்து கடவை பாதுகாப்பற்ற கடவையாக காணப்படும் நிலையில், விபத்து சம்பவங்கள் இடம்பெற்ற நிலையிலும் அதனை பாதுகாப்பான புகையிரத கடவையாக மாற்றம் செய்து தருமாறு அப்பகுதி மக்கள் பல்வேறு தரப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் தொடர்ந்து அது பாதுகாப்பற்ற கடவையாகவே காணப்படுகிறது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |