கிளிநொச்சியில் கால் நடைகளைக் கொண்டு விவசாயம்
கிளிநொச்சியில் கால்நடைகளைக் கொண்டு விவசாயம் மேற்கொள்ளும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எரிபொருள் தட்டுப்பாடு
தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமை காரணமாகவும், பெரும்போக பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட உள்ள நிலையிலும் கால்நடைகளைக் கொண்டு உழவுகளை மேற்கொள்ள விவசாயிகள் முயற்சித்துள்ளனர்.
காலபோக பயிர்ச் செய்கைகான நிலத்தினை பண்படுத்துவதற்க எரிபொருள் கிடைக்கப் பெறாத காரணத்தினால், பல விவசாயிகள் பெரும்போக பயிர்ச் செய்கை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை.

பயிர்ச்செய்கை
கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளில் சிறுபோக பயிர்ச்செய்கைகள் முடியும் நிலையில், பெரும் போக பயிர்ச்செய்கை நிலத்தினை பண்படுத்துவதற்கான சிரமங்களை எதிர்கொள்வதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சில விவசாயிகள், தமது கால்நடைகளை பயன்படுத்தி நிலத்தினை
பண்படுத்தி வருவதனை அவதானிக்க முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
ஹனிமூன் வந்த இடத்தில் சோழன்-நிலாவிற்குள் ஏற்பட்ட சண்டை, பல்லவன் செய்தது என்ன?... அய்யனார் துணை புரொமோ Cineulagam