இராணுவத்தின் பசுமை விவசாயம்: நாடு முழுவதும் மேற்கொள்ளப்போகும் நடவடிக்கை
நாடு முழுவதும் உள்ள தரிசு நிலத்தில் அல்லது கைவிடப்பட்ட நிலத்தில் அரச காணிகள் உள்ளடங்களாக 1500 ஏக்கரில் விவசாயம் மேற்கொண்டு இலங்கை உணவு பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டத்தை மேம்படுத்தும் முகமாக இராணுவத்தின் பசுமை விவசாய வழிகாட்டல் குழு நிறுவப்பட்டுள்ளது.
அரச தலைவரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த ஆண்டு ஜூலை மாத தொடக்கத்தில் இந்த அவசர ஏற்பாடு ஆரம்பிக்கப்பட உள்ளது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே தலைமையில் பிரதி நிலை மேஜர் ஜெனரல் சன்னவீரசூரிய இத் திட்டத்தின் முகாமைத்துவ தலைவராக நியமிக்கப்படவுள்ளார்.
பசுமை விவசாயம்
இராணுவ வளங்கள் தளபதி மேஜர் ஜெனரல் இந்துசமரக்கோன், தலைமைகளப் பொறியியலாளர் மேஜர் ஜெனரல் மகிந்த ஐவர்தன, உபகரண மாஸ்டர் ஜெனரல் பிரசண்ண ரணவக்க, பொது பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே, நிதி முகாமைத்துவப் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர என சிரேஸ்ட அதிகாரிகள் பலர் பசுமை விவசாய வழிகாட்டல் குழுவில் உள்ளடங்குகின்றார்கள்.
இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு இத்திட்டத்தை மேற்பார்வையிட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.