வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை திறக்குமாறு கோரிக்கை
வவுனியா (Vavuniya) பொருளாதார மத்திய நிலையம் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக, புதிதாக அமைக்கப்பட்டு திறக்கப்படாத நிலையில் காணப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை பகிரங்க கேள்வி கோரல் மூலமாக வழங்கி அதனை செயல்படுத்த வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடத்துள்ளனர்.
குறிப்பாக 295 மில்லியன் ரூபா செலவில் அப்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக அமைக்கப்பட்ட குறித்த பொருளாதார மத்திய நிலையம் வவுனியா மாவட்ட விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வகையிலும் அமைக்கப்பட்டிருந்தது.
தரகு பணம்
ஓமந்தையில் அமைப்பதா? தாண்டிக்குளத்தில் அமைப்பதா? என்று அரசியல்வாதிகளின் பல்வேறு இழுபறிகளுக்கு மத்தியில் மூன்று முறிப்பு பகுதியில் அமைக்கப்பட்ட குறித்த பொருளாதார மத்திய நிலையமானது இதுவரை திறக்கப்படாத நிலையில் கட்டிடம் சேதமடையும் நிலையில் காட்சியளித்து வருகிறது.
இந்நிலையில், குறித்த பொருளாதார மத்திய நிலையத்தினை பகிரங்க கேள்வி கோரலூடாக வழங்கும் பட்சத்தில் விவசாயிகள் நியாயமான விலைக்கு தமது உற்பத்தி பொருட்களை வழங்க முடியும் என தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, தற்போது வவுனியாவில் உள்ள மொத்த மரக்கறி கொள்முதலாளர்கள் சர்வாதிகார போக்கோடு செயல்படுவதாகவும் 10 வீதம் என்ற தரகுப்பணத்தை பெறும்நிலை காணப்படுவதோடு சில வேளைகளில் பொருட்கள் விற்பனை செய்யப்படவில்லை என விவசாயிகளிடம் பணம் வழங்கப்படாத நிகழ்வுகளும் சம்பவிக்கின்றன.
எனவே, பகிரங்க கேள்வி கோரலுக்கு உட்படுத்துகின்ற போது விவசாயிகளின் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஆகவே, இவ்விடயம் தொடர்பில் விவசாய அமைச்சரும் புதிய அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரியுள்ளனர்.


| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri