அதிர்ச்சி முடிவை எடுத்துள்ள இந்திய வேகப்பந்து வீச்சாளர்
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொகமது சமி (Mohammed Shami), டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதில்லை என்ற முடிவை எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
அவர் இந்திய டெஸ்ட் அணியில் இணைந்து அணியை வலுப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கு பதிலாக 2025 செம்பியன்ஸ் கிண்ணம் மற்றும் 2025 ஐபிஎல் தொடருக்கு அவர் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடருக்கான இந்திய அணி
இந்திய அணி, தற்போது அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சில் பும்ரா மற்றும் முகமது சிராஜ் மட்டுமே அனுபவ பந்துவீச்சாளர்களாக இடம்பெற்றுள்ளனர்
மூன்றாவது வேகப் பந்துவீச்சாளராக ஹர்சித் ராணா மற்றும் ஆகாஸ் தீப் இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
அனுபவ வேகப் பந்துவீச்சாளர்
எனினும், வேகப்பந்து வீச்சில் இந்திய அணி பின்னடைவையே சந்தித்து இருக்கிறது.
இந்த நிலையில் அனுபவ வேகப் பந்துவீச்சாளர் ஆன முகமது சமி காயத்திலிருந்து மீண்டு விட்ட நிலையில், விரைவில் அவுஸ்திரேலியாவுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், தொடர்ந்தும் அடிக்கடி முழங்காலில் வீக்கம் ஏற்படுவதால், முகமது சமி டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதில்லை என்ற அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |