இந்தியாவுக்கு அநுர சுமந்து செல்வது என்ன!

Anura Kumara Dissanayaka Sri Lanka India
By T.Thibaharan Dec 16, 2024 12:47 AM GMT
T.Thibaharan

T.Thibaharan

in கட்டுரை
Report

"முடிந்தால் குடுமியை பிடி முடியாவிட்டால் காலை பிடித்துக் கொள்" இது கடந்த 2500 ஆண்டுகளாக இலங்கை ராஜதந்திரத்தின் பாரம்பரியம். அதுவும் குறிப்பாக பௌத்த சிங்கள ராஜதந்திர அணுகுமுறை என்று சொல்வதே பொருந்தும்.

அத்தகைய ஒரு தொடர்ச்சி குன்றாத ராஜதந்திரப் பின்னணியைக் கொண்ட இலங்கை அரசு இயந்திரம் எப்போதும் எதிரிகளின் முன்னே தன்னை திடமாகவும், நம்பிக்கையாகவும் நின்று கொண்டுதான் அரசியல் காய்களை நகர்த்தும்.

இந்த அடிப்படையில்தான் இலங்கையின் புதிய ஜனாதிபதியும் புதிய அரசாங்கமும் தனது ராஜதந்திர யூகத்தால் முரண்பட்ட சக்திகளான இந்தியாவையும், சீனாவையும், மேற்குலகத்தையும் ஒரே நேர்கோட்டில் வைத்து எப்படி கடந்த காலத்தில் வெற்றி கொண்டார்கள் எதிர்காலத்தில் எப்படி வெற்றி கொள்வர் என்பதனை சற்று விரிவாக பார்ப்போம்.

கொழும்பில் கடற்படையினரால் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உட்பட 11 இளைஞர்கள்

கொழும்பில் கடற்படையினரால் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உட்பட 11 இளைஞர்கள்

ராஜதந்திர மூளைகள்

இலங்கையின் அரசியல் வரலாற்றில் சிங்கள தேசத்தின் சிம்மாசனத்தில் எவர் அமர்ந்தாலும் அவரை சிங்கள தேசத்தின் ராஜதந்திர மூளைகள் தூணாக நின்று தாங்கி அந்த அந்த சிம்மாசனத்தை அலங்கரிக்கச் செய்துள்ளனர். கடந்த 76 ஆண்டுகால ஜனநாயக அரசியலிலும் இது தொடர்கிறது.

அந்தவகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை கிராமப்புறத்தில் இருந்து வந்த ஒரு சாதாரண மனிதராகவோ, அல்லது அரசியல்வாதியாகவோ பார்க்க கூடாது. சிங்கள ராஜதந்திர கட்டமைப்புக்குள்ளால், பல நூற்றாண்டு காலம் சிங்கள சிம்மாசனத்தை தொடர்ச்சியாக புடை சூழப்பட்டிருக்கும் சிங்கள ராஜதந்திர மூளைகளின் செயற்திறன், தொடர் ராஜதந்திர செயற்பாடுகளினால் சேமிக்கப்பட்ட கூட்டு ராஜதந்திர வளர்ச்சியின் கொள்ளளவு என்பவற்றிற்கு ஊடாகவே பார்க்க வேண்டும்.

அரசியல் வரலாற்று கூற்று ஒன்றை இங்கே ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது. "சிம்மாசனங்களின் கீழ் நசிந்து கிடக்கும் மூளைகளின் எண்ணிக்கையோ எண்ணற்றவை" எனவே வரலாற்றுத் தொடர் வளர்ச்சியும், தொன்மையும், செயற்திறன் மிக்க ராஜதந்திர மூளைகள் சிம்மாசனங்களை எப்போதும் புடை சூழ்ந்து தாங்கி நிற்கின்றன. அது சிங்கள தேசத்தின் சிம்மாசனத்திற்கும் பொருத்தமானதாகவே உள்ளது.

சிங்களதேச சிம்மாசனத்தில் யார் அமர்ந்தாலும் அந்த சிம்மாசனம் ராஜதந்திர மூளைகளால் அலங்கரிக்கப்படும் என்பதையே கருத்தில் கொள்ள வேண்டும். எத்தகைய நெருக்கடிகள் வந்தாலும் அதற்கு சிம்மசொப்பனமாக நின்று ராஜதந்திர மூளைகள் வெற்றியைத் தேடிக் கொடுக்கும், கொடுத்துள்ளனர் என்பதை இலங்கையின் கடந்கால அரசியல் வரலாறு நிரூபித்திருக்கிறது.

இந்தியாவுக்கு அநுர சுமந்து செல்வது என்ன! | What Is Anura Carrying To India

இந்திய துணைக்கண்ட புவிசார் அரசியல் இலங்கை அரசுக்கு எப்போதும் சவாலாக, அச்சுறுத்தலாக இருந்திருக்கின்றன. அது அசோகப் பேரரசாயினும் சரி சோழப் பேரரசாயினும் சரி இலங்கைத் தீவின் இறையாண்மைக்கு சவாலாக இருந்திருக்கின்றன.

இந்து சமுத்திரத்தின் காவலனாக இந்தப் பிராந்தியத்தை கட்டுப்படுத்தக்கூடிய வளங்களைக் கொண்டதாக இந்திய அரசு வளர்ந்திருக்கின்றது. இருந்தபோதிலும் இலங்கைக்கு எதிரே நிற்கின்ற இந்த இந்தியா என்கின்ற பெரிய மதயானையை ஒரு யானைப்பாகன் எவ்வாறு அதன் கழுத்தில் அமர்ந்திருந்து சிறிய அங்குசத்தால் எவ்வாறு கட்டுப்படுத்துகிறானோ அவ்வாறே இந்தியாவை இலங்கை தனது ராஜதந்திர அங்குசத்தாலும், வியூகத்தாலும், செயற்பாடுகளினாலும் தொடர்ந்தும் கட்டுப்படுத்தியும் வெற்றி கொண்டும் வந்துள்ளனர்.

அந்த வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அடிப்படையில் இந்திய எதிர்ப்பு வாதியாக இருந்தாலும் அவரை அந்த சிம்மாசனத்தில் தொடர்ந்து தக்கவைக்கவும், இந்தியாவை வெற்றிகொள்வதற்குமான வழிமுறைகளை சிங்கள ராஜதந்திர வட்டாரங்களினால் திட்டமிட்டு வெற்றிகரமாக வெற்றியின் பாதையில் வழிநடத்தப்படுவார்.

இங்கே இலங்கையின் ராஜதந்திர வரலாற்றை சற்று பார்க்க வேண்டும். உலகளாவிய அரசியல் ராஜதந்திர வரலாற்றில் தொடர்ச்சி குன்றாமல் எழுதப்பட்ட வரலாற்றை இலங்கையை விடுத்து வேற எந்த ஒரு நாட்டிலும் காணமுடியாது.

பெருமித உணர்வு

இலங்கை தீவில் மட்டுமே கடந்த 2500 ஆண்டுகால வரலாற்றை தொடர்ச்சி குன்றாமல் கி.பி 6ம் நூற்றாண்டில் மகாநாம தேரர் என்ற பௌத்த துறவியினால் பாளி மொழியில் எழுதப்பட்ட மகாவம்சம் என்ற நூலின் ஊடாக தொடர்ந்து பதிவிடப்பட்டு வந்திருக்கிறது.

விஜயன் தொடக்கம் அநுரகுமார திசாநாயக்க வரை அது தொடர்ச்சி குன்றாமல் எழுதப்பட்டு கொண்டிருக்கிறது என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். மகாவம்சம் என்ற நூலுக்கு உலகளாவிய ஒரு மதிப்பு உண்டு. அந்த நூலில் கூறப்பட்ட பல விடயங்கள் புனைகதைகளாகவோ, பொய்யாகவோ, ஏற்றுக் கொள்ள முடியாததாகவோ இருக்கலாம்.

ஆனால் அது ஒரு தொடர்ச்சி ஒன்றாத அரசியல் ராஜதந்திர வரலாற்றை பதிவிட்டு இருக்கிறது என்ற அடிப்படையில் ராஜதந்திரத் தொடர்ச்சியை அது எழுதி வைத்திருக்கிறது என்ற அடிப்படையில் அதற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. அதேபோல நவீன வரலாற்றில் மெண்டிஸ் என்னும் சிங்கள வரலாற்று ஆசிரியர் இலங்கையின் 2500 ஆண்டுகால ராஜதந்திர வரலாற்றை 'Foreign Relations of Sri Lanka' (Earliest Times to 1965 L. B. Mendis) என்ற ஆங்கில நூலில் விரிவாக எழுதியுள்ளார்.

உலகளாவிய நாடுகளில் அந்நாடுகளின் ஒரு சில காலகட்டங்களுக்கான ராஜதந்திர வரலாற்றையே எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால், இலங்கை ஒட்டுமொத்தமான ஒரு நீண்ட ராஜதந்திர வரலாற்றை பதிவு செய்து வைத்திருக்கின்ற வரலாற்று உணர்வு மிக்க மக்கள் கூட்டத்தை கொண்ட நாடு என்ற அடிப்படையில் தான் சிங்கள தேசத்தின் சமூகவியலை ஈழத்தமிழர் பார்க்க வேண்டும்.

இந்தியாவுக்கு அநுர சுமந்து செல்வது என்ன! | What Is Anura Carrying To India

ஒரு தொடர்ச்சி ஒன்றாத அரசியல் வரலாற்று ராஜதந்திர நடைமுறைகளை எழுதி வைத்திருக்கிறோம் என்ற அடிப்படையில் சிங்கள மக்களுக்கு தங்களுடைய வரலாற்றிலும், அரசியலிலும், ராஜதந்திரத்திலும் ஒரு பெருமிதம் உண்டு. அந்தப் பெருமித உணர்வு அவர்களுக்கு மேலான, மேன்மையான ராஜதந்திர உணர்வையும், ஊக்கத்தையும், கர்வத்தையும் கொடுக்கிறது.

அந்தப் பெருமித உணர்வு அந்த மக்கள் கூட்டத்தின் ராஜதந்திர வளர்ச்சிக்கான அடிப்படை மனநிலையையும், வரலாற்று உணர்வையும், யாரையும் வெற்றி கொள்வோம் என்ற துணிவையும், திடசங்கர்பத்தையும் கொடுத்திருக்கிறது. அந்த அடித்தளத்தில் இருந்து கொண்டுதான் சிங்கள மக்களின் ராஜதந்திர வட்டாரங்கள் நெருக்கடிகள் ஏற்படுகின்ற போது மிகப்பலமாகவும், வேகமாகவும் சாதுரியமாகவும் வளர்ச்சி பெற்று இன்று மேல் நிலையில் உள்ளது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள தவறக் கூடாது.

இலங்கைத் தீவின் மீது முதலாவது படையெடுப்பு கிமு 3ம் நூற்றாண்டில் (கி.மு247) பௌத்தம் என்ற மதத்தின் பெயரால் அசோகச் சக்கரவர்த்தியினால் மேற்கொள்ளப்பட்டது. மௌரியப் பேரரசின் மன்னன் அசோகன் அனுப்பிய மணிமுடியையும் அசோகனின் “தேவநம்பிய“ என்ற பட்டப் பெயரையும் தாங்கியே சிம்மாசனத்தில் அமர வேண்டிய நிலை தீச மன்னனுக்கு (தேவநாம்பியதீச)ஏற்பட்டது.

ஆயினும் தன்மீது வீசப்பட்ட அந்த பௌத்தம் என்கின்ற பலமான ஆக்கிரமிப்பை தமக்கு கேடயமாக தூக்கிப்பிடித்து பிற்காலத்தில் பௌத்தத்தின் பிரிவுகளும், இந்து மதமும் இலங்கையை அடிபணிய வைக்க முடியாதபடி தேரவாத பௌத்தம் சிங்கள மக்களுக்கு கேடயமாக, காப்பரனாக மாற்றியமைக்கப்பட்டது.

எதிரியின் எதிரி உனது நண்பன்

அந்த பௌத்தமே இன்றும் சிங்கள மக்கள் கூட்டத்தை காக்கின்ற காவலனாக, தடுப்புச் சுவராக சிங்கள மக்களின் சுயாதீனத்தை பேணக்கூடிய அடித்தளமாக அமைந்திருக்கிறது. அவ்வாறே சோழப்பேரரசு எழுச்சி பெற்ற காலத்திலும் சிங்கள மன்னர்கள் “எதிரியின் எதிரி உனது நண்பன்“ என்ற கோட்பாட்டை பின்பற்றி காலத்துக்கு காலம் பாண்டிய, சேர மன்னர்களுடன் நட்புறவைப் பூண்டு சோழர் ஆதிக்கத்தை சிங்கள தேசத்தில் தடுத்து வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் அரியணை ஏற வேண்டிய சோழ இளவரசர் ஆதித்த கரிகாலரை படுகொலை செய்ததில் சிங்கள ராஜதந்திரத்தின் கரங்களும் இருந்துள்ளன என்ற வரலாற்றையும் மறந்து விடக்கூடாது. இந்த விடயத்தில் எதிரியை முளையிலேயே கிள்ளும் தந்திரத்தை அன்று அவர்கள் கையாண்டுள்ளார்கள் என்பது புலனாகிறது.

பதினெட்டாம் நூற்றாண்டில் இலங்கையின் கரையோரத்தை ஒல்லாந்தர் கைப்பற்றிய போது விமலதர்மசூரியன் கண்டிராச்சியத்தை அதனுடைய நில அமைவு காரணமாக சிங்கள மக்களின் திரட்சி, பௌத்தத்தின் வளர்ச்சி காரணமாகவும் தன்னை தனித்துவமாகவும் பலமாகவும் வைத்துக்கொண்டு விமலதர்மசூரியன் “போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்“ என்று ஒல்லாந்த ஆளுநருக்கு தூது அனுப்பினான்.

இந்த வரலாற்று பின்னணியில் இருந்துதான் ஜே.ஆர் 1983ம் ஆண்டு ஜூலை படுகொலையின் போது தமிழ் மக்களை நோக்கி "போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்" என்று அரைகூவல் விடுத்ததன் ஊடாக சிங்கள மக்களின் கடந்த கால வரலாற்று உணர்வைத் தட்டி எழுப்பி சிங்கள மக்களுக்கு கொலை உணர்வை தூண்டி தமிழ் மக்களை வகை தொகையின்றி படுகொலை செய்யத் தூண்டினார் என்பதனை வரலாற்று நடைமுறைகளுக்கு ஊடாக நாம் பார்க்க வேண்டும்.

இந்தியாவுக்கு அநுர சுமந்து செல்வது என்ன! | What Is Anura Carrying To India

இன்னும் ஒரு சந்தர்ப்பத்தில் ஜே.ஆர் சிங்கள ராஜதந்திரம் பற்றி குறிப்பிடுகையில் சிங்கள ராஜதந்திரம் எமக்கு (Golden threads) அதாவது சிங்கள மக்களுக்கே உரித்தான பெறுமதிவாய்ந்த ராஜதந்திர மூலோபாயாம் என்பது எங்களுக்கே உரித்தான தங்கச் சங்கிலி என்று பொருள் படவே ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் வார்த்தைகள் அமைந்துள்ளன.

இதன் உட்பொருள் என்னவெனில் எக்காலத்திற்கும் பொருத்தமான வளம் பொருந்திய ராஜதந்திரம் மூலோபாயம் சிங்கள மக்களிடன் உண்டு அதனை நாம் எப்போதும் பயன்படுத்துவோம் என்பதாகவே உள்ளது. இத்தகைய ராஜதந்திரத்தை டி எஸ் சேனநாயக்க பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தியுள்ளார்.

இந்தியா சுதந்திர விடுதலைப் போராட்ட காலகட்டத்தில் இந்தியா விடுதலை பெறப்போவது நிச்சயம் எனறு டி.எஸ் உணர்ந்தபோது இலங்கைக்கான விடுதலையை கத்தியின்றி, இரத்தமின்றி நோகாமல் நொங்கு குடிப்பது போன்று விடுதலையைச் சாத்தியம் ஆக்குவதற்கான தந்துரோபாயத்தை வகுத்தார்.

அதன் அடிப்படையில்த்தான் 20-06-1940ல் இலங்கை தேசிய காங்கிரசின் சார்பில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன இந்தியத் தலைவர் ஜவஹர்லால் நேருவுக்கு “சுதந்திர இந்தியாவுடன் சுதந்திர இலங்கை ஒரு சமஷ்டி ஆட்சிமுறையோ அல்லது நெருக்கமான கூட்டாட்சி முறையோ (Federation or Close Union) அமைப்பது பற்றி உங்களுடன் நாங்கள் கலந்துரையாட விரும்புகிறோம்“ என்று கடிதம் எழுதியிருந்தார். (ஆதாரம்- மைக்கல் றொபேர்ட் தொகுத்த Documents of the Ceylon National Congress என்ற நூல்) "நாம் இந்திய கூட்டாட்சி அரசில் இணைய ஆர்வமாக உள்ளோம்" என்று கடிதம் எழுதியோடு மாத்திரமல்ல சிங்கள அரசியல்வாதிகள் இந்திய தேசிய காங்கிரசின் மகாநாட்டில் கலந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவு அளித்தனர்.

இந்த ஆதரவு என்பது உண்மையில் இந்திய காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதற்காகவல்ல அவ்வாறு ஒரு போக்கை காட்டிவிட்டு பிரித்தானியருடன் பேரம் பேசுவதற்கான ஒரு களச் சூழலை ஏற்படுத்துவதையே நோக்காகக் கொண்டது. இரண்டாவது அர்த்தத்தில் பிரித்தானியரை நிர்பந்திக்கச் செய்வது.

எமக்கான விடுதலையை தராவிட்டால் நாம் இந்தியாவுடன் இணைந்து விடுவோம் என்பதன் மூலம் சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தின் இந்து சமுத்திர ஆளுகையை முடக்கி விடுவோம் என்ற எச்சரிப்பதாகவும் அமைந்தது.

ராஜததந்திரி ஜே.ஆர்

அவ்வாறே 06-05-1942ல் மும்பையில் டி.எஸ் சேனநாயக்கரை பார்த்து சுதந்திரம் அடையப்போகும் இலங்கையின் வெளியுறவுக் கொள்கை எவ்வாறு இருக்கும் என டைம்ஸ் ஒஃப் இந்தியா பத்திரிகையாளர் கேட்ட டி.எஸ். சேனநாயக்க அளித்த நேர்காணலில் “பெரிய பலம் பொருந்திய இந்திய சமஷ்டி அமைப்புக்குள் ஓர் அங்கமாக இலங்கை இணைவது இலங்கையின் நலனுக்கு உகந்தது“ என்றும் "நாம் விரும்பியோ, விரும்பாமலோ இந்தியாவின் பக்கமே நிற்போம்" என்று பதிலளித்திருந்தார்.

இந்த அறிவிப்பானது இந்திய பத்திரிகைகளில் வெளிவந்து இந்திய மக்களின் வரவேற்பையும் ஆதரவையும் பெற்றது. இதன் மூலம் இந்தியர்களின் பொது மக்கள் அபிப்பிராயம்(Public opinion) பெறுவதிலும் இந்திய மக்களைக் குஷிப்படுத்துவதிலும் தம்மை நம்ப வைப்பதிலும் கவனமாக இருந்தார்.

அதன் மூலம் சிங்கள தேசத்தின் நலன்களை அடைவதிலும் சிங்கள ராஜதந்திரிகள் அல்லது தலைவர்கள் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருந்து செயற்படுவர். இவ்வாறுதான் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பிரதமராக இருந்த காலகட்டத்தில் இந்து சமுத்திரத்தை அணு ஆயுதமற்ற சமாதான பிராந்தியமாக மாற்ற வேண்டும் என்று ஐ.நா உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களுக்கு அரை கூவல் விடுத்தார். இந்து சமுத்திரத்தை சமாதான பிராந்தியமாக ஒருபோதும் மாற்ற முடியாது என்பது அவருக்கு நன்கு தெரியும்.

ஆயினும், இந்து சமுத்திரத்தை அனுவாயுதமற்ற சமாதான பிராந்தியமாக அறிவிக்க வேண்டும் என்பதன் மூலம் இந்திய மக்களின் பொது அபிப்பிராயத்தையும், விருப்பையும் அவர் பெற்றுக் கொண்டார் என்பது மாத்திரமல்ல 1962 சீன-இந்திய யுத்தத்தின் போது சீனாவின் பக்கம் இலங்கை நின்றது என்ற கரையையும் கழுவிக் கொண்டார்.

தங்கள் மீதான பொது அபிப்பிராயத்தை திரட்டுவதில் இலங்கையின் கடந்த அரசியல் வரலாற்றில் எப்போதுமே அவர்கள் வெற்றியையே பெற்றிருக்கிறார்கள். தமிழினத்தின் மீதான முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை அதனால் ஏற்பட்ட அபகீர்த்தியைகூட உலகப் பொது அபிப்பிராயத்தில் இருந்து பெரிய சேதமின்றி கடந்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்தியாவுக்கு அநுர சுமந்து செல்வது என்ன! | What Is Anura Carrying To India

அதே டி.எஸ் நேனநாயக்க 1947ஆம் ஆண்டு இலங்கை தேர்தலில் பிரதமராக வந்தவுடன் பிரித்தானிய-இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்து கொண்டார். தாம் “பிரித்தானியாவின் நல்ல நண்பர்“ என்றும் “யுத்தத்தின் போதும் சமாதானத்தின் போதும் பிரித்தானியாவின் பக்கம் நின்றே எப்போதும் செயற்பட்டவர்கள்“ என்றும் எனவே தம்மீது நம்பிக்கை வைக்குமாறும் ஓலிவர் குணதிலக பிரித்தானியருடன் பலகட்ட பேச்சுக்களின் போது எடுத்துக்கூறி, யாப்பு உருவாக்கம், இலங்கை சுதந்திரம் அடைவது பற்றிய தீர்மானம், பிரித்தானியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கையில் பிரித்தானிய தளங்களை அமைத்தல் போன்ற முடிவுகளை டி.எஸ்.சேனநாயக்கவின் சார்பில் நிறைவேற்றினார்.

(இவை தொடர்பான விபரங்களை Sir Charles Joseph Jeffries vOjpa OEG, A Biography of Sir Oliver Ernest Goonetilake என்ற நூலில் வரும் Prelude to Freedom’, ‘Crucial Negotiations’ போன்ற அத்தியாயங்களின் 88, 89ம் பக்கங்களில் காணலாம்.) அதுவரை காலமும் இந்தியாவுக்கு ஆதரவு முகம் காட்டிய டி எஸ் சேனாநாயக்க இந்தியாவின் முதுகில் ஓங்கி குத்தி விட்டார் என்ற வரலாற்றையும் இங்கே கருத்தில் கொள்ள வேண்டும்.

இத்தகைய ஒரு போக்கு காட்டி இன்னொரு இடத்தில் ராஜதந்திர வியூகத்தை இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் ஜே.ஆர் இப்படிச் சொன்னார் "நான் ஒரு குத்துச்சண்டை வீரன் எதிரிக்கு மூக்கில் குத்துவதாக பாசாங்கு செய்து மூக்கை பார்த்த வண்ணம் நின்று கொண்டு அடி வயிற்றுக்கு இலக்கு வைத்து குத்துவேன்" அந்த அளவிற்கு இலங்கையின் நவீன வரலாற்றில் ராஜதந்திரத்தில் ஜே.ஆர் முதன்மையானவர், முக்கியமானவர்.

உண்மையில் நவீன அரசியல் ராஜதந்திரத்தின் தந்தை என வர்ணிக்கப்படும் மாக்கியவல்லியும், இந்தியா ராஜதந்திரியான சாணக்கியரும் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் அவர்கள் ராஜதந்திரத்தை ஜே.ஆரிடம் கற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கும் என்று சொன்னால் மிகையில்லை.

இந்தப் பின்னணியில் தற்போது இந்தியாவுக்கு சென்றிருக்கும் இலங்கை ஜனாதிபதி எதைச் சுமந்து செல்லப் போகிறார், எதை சுமந்து வரப் போகிறார் என்று பார்ப்போமானால் தங்கச்சங்கிலி ராஜதந்திர பாரம்பரியத்தின் பாதுகாப்புடனும் நம்பிக்கையுடனும் இந்தியாவுக்குள் நுழையப்போகும் அநுர.

ஜனாதிபதி அநுரவுக்கு இந்தியாவில் வழங்கப்பட்ட சிறப்பு வரவேற்பு

ஜனாதிபதி அநுரவுக்கு இந்தியாவில் வழங்கப்பட்ட சிறப்பு வரவேற்பு

இந்தியாவுக்கான விசேட விஜயத்தில் அநுர சந்தித்த முக்கியஸ்தர்கள்

இந்தியாவுக்கான விசேட விஜயத்தில் அநுர சந்தித்த முக்கியஸ்தர்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 16 December, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, சண்டிலிப்பாய், ஜேர்மனி, Germany, ஓமான், Oman, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

18 Jan, 2019
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுவைதீவு, நாரந்தனை, Vejle, Denmark, Horsens, Denmark

20 Dec, 2025
25ம் ஆண்டு, 15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Milton, Canada

16 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கோண்டாவில், Toronto, Canada

18 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

18 Jan, 2016
நன்றி நவிலல்

புத்தூர், அச்சுவேலி

18 Dec, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Markham, Canada

12 Jan, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Dortmund, Germany

08 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Paris, France

16 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Berlin, Germany

03 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், சுவிஸ், Switzerland

16 Jan, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், London, United Kingdom

17 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, Toronto, Canada

19 Jan, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, ஓட்டுமடம், நல்லூர், செங்காளன், Switzerland

10 Jan, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, கொழும்பு, Toronto, Canada

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் பாலாவோடை, கொழும்பு

16 Jan, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், மீசாலை, Verona, Italy

15 Jan, 2026
மரண அறிவித்தல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு, நுவரெலியா, வவுனியா, Mississauga, Canada

09 Jan, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், London, United Kingdom

17 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், La Courneuve, France

16 Jan, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Markham, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, நாரந்தனை, வேலணை, கரம்பொன், Toronto, Canada

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US