கிளிநொச்சியில் பரிதாபமாக உயிரிழந்த குடும்பப் பெண்
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாதன் திட்டம் பகுதியில் தவறான முடிவெடுத்த குடும்பப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (05.12.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற மரண விசாரணை அதிகாரி விசாரணை மேற்கொண்டுள்ளார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக விசாரணையில் தெரியவந்த நிலையில், முழுமையான விசாரணைக்காக அவர் பரிந்துரைத்துள்ளார்.
மதுபானசாலைகள்
இந்தநிலையில், குறித்த விடயம் தொடர்பாக மாட்ட நீதவானிற்கு அறிக்கை சமர்ப்பித்து விசாரணை செய்வதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த உயிரிழந்த தாய்க்கு மது அருந்தும் பழக்கம் உள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பொலிஸ் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட 14 வயதுடைய சிறுவனும் அதிக மதுபோதையில் இருந்துள்ளார்.
இந்தநிலையில், சிறுவர்கள் மது பழக்கத்துக்கு ஆளாவதாகவும், 16 சில்லறை மதுபான சாலைகள் திறக்கப்பட்டமை மாவட்டத்துக்கு ஆபத்தான நிலையை உருவாக்கும் எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது.
மாவட்டத்தில் சிறுவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், மதுபானசாலைகளை மூட வேண்டும் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri
