கல்முனையில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர் (Photos)
கல்முனை பொது மைதானத்தில் இருந்து ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட உடையார் வீதியை சேர்ந்த 58 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான காளிக்குட்டி கணேசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த வியாழக்கிமை மாலை முதல் காணாமல் போணதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
பொது மைதானத்தில் சடலம் காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து கல்முனை பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு தடயப்பொருட்களை ஆய்வு செய்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு குடும்பத்தினர் அழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்ற நிலையில், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
இந் நிலையில் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




