சிக்கலில் ஆளும் தரப்பு எம்.பியின் தந்தை.. அம்பலமாகும் பெரும் மோசடி!
தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தந்தை நில மோசடியில் ஈடுபட்டதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா தொகுதி அமைப்பாளருமான வருண ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட நபர் தொடர்பில் ஏற்கனவே பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முறைப்பாடு தொடர்பான பி அறிக்கை(B report) உட்பட போலி ஆவணங்களின் நகல்களும் தன்னிடம் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
குறித்த நபர், ஏற்கனவே விற்ற அல்லது ஆக்கிரமித்துள்ள நிலத்தின் பத்திரத்தை, மற்றொரு நபருக்கு பத்திரமாக எழுதியதாக அவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சட்ட நிபுணர்
பொதுவாக, ஒரே நிலத்திற்கு இரண்டு பத்திரங்களை எழுதுவது நாட்டின் சட்டத்தின் கீழ் பாரிய மோசடியாகும்.
இந்நிலையில், அவரின் மகனான தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தை நன்கு அறிந்த ஒரு சட்ட நிபுணர் எனவும் வருண ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் சொத்து பொறுப்பு அறிக்கையில் அதிக சொத்துக்கள் இல்லை என்றாலும் அவரது தந்தை மோசடி செய்ததாக வருண ராஜபக்ச கூறியுள்ளார்.
எனினும், தனது தந்தையின் செயல்களால் தனக்கு ஏதேனும் நன்மை கிடைத்ததா என்பது உட்பட இந்த மோசடி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விளக்கமளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



