9 பேருடன் பயணித்த முச்சக்கரவண்டி விபத்து; இருவர் உயிரிழப்பு
Sri Lanka Police
Monaragala
By Rakesh
மொனராகலை - தனமல்வில பகுதியில் முச்சக்கரவண்டியொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர்.
அத்துடன் இந்த சம்பவத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
சூரியாரா பகுதியில் இன்று முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
முச்சக்கரவண்டியில் பயணித்த 9 பேர்
குறித்த முச்சக்கரவண்டியில் 9 பேர் பயணித்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
உடவலவயிலிருந்து தனமல்வில நோக்கிப் பயணித்த குறித்த முச்சக்கரவண்டி, வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US