யாழ்ப்பாணத்தில் திடீர் சுகவீனம் ஏற்பட்ட குடும்பப் பெண் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் - தெல்லிப்பழையில் திடீர் சுகவீனம் ஏற்பட்ட குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
மாவைகலட்டி, தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு நேற்றையதினம் (15.12.2024) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண்ணுக்கும் அவரது குழந்தைக்கும் உடல் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் நேற்றையதினம் (15) சிகிச்சைக்காக அளவெட்டி வைத்தியசாலைக்கு சென்று மருந்து எடுத்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.
மரண விசாரணைகள்
வீடு சென்ற பெண்ணுக்கு மீண்டும் உடல் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் மயக்கமுற்றுள்ளார். அவரை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில், உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
