தலைமன்னார் ஊர்மனையில் சிறுமியின் கொலை - தப்பியோடியவருக்கு நேர்ந்த கதி
தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் சிறுமியை தவறானமுறைக்குட்படுத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் தப்பியோடிய சந்தேக நபர் மீண்டும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி மாலை காணாமல் போன அக்கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி, தனது அம்மம்மாவின் வீட்டில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் உள்ள தென்னந் தோப்பில் இருந்து மறுநாள் 16ஆம் திகதி காலை சடலமாக மீட்கப்பட்டார்.
தப்பியோட்டம்
குறித்த சிறுமியின் சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது குறித்த சிறுமி தவறானமுறைக்குட்படுத்தி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தெரியவந்தது.
இதனையடுத்து குறித்த கொலைச் சம்பவம் தொடர்பாக வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தந்து குறித்த தோட்டத்தில் வேலை செய்து வந்த 55 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த மே மாதம் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த போது வைத்தியசாலையில் இருந்து தப்பியோடியுள்ளார்.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்
குறித்த நபர் கடந்த 6 மாதங்களாக தலைமறைவாக வாழ்ந்து வந்த நிலையில், பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேக நபர் நேற்றைய தினம் (15) திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
தலைமன்னார் பொலிஸார் குறித்த சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம்(16) காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தி பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
