யாழில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!
யாழில்(Jaffna) இரண்டு நாட்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம்(24) உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அச்சுவேலி - தம்பாலை பகுதியை சேர்ந்த அப்புத்துரை கருணாகரன் (வயது 57) என்று தெரியவந்துள்ளது.
நிமோனியா காய்ச்சல்
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபருக்கு கடந்த 21ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குடும்பஸ்தர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
நிமோனியா காய்ச்சல் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri