வவுனியாவில் ஆற்றில் மூழ்கி குடும்பஸ்தர் பலி
வவுனியா (Vavuniya), பேராறு நீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளது.
தேடும் பணி
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்று மாலை பேராறு நீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் நபர் ஒருவர் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் நீருக்குள் தவறி வீழ்ந்து மூழ்கியுள்ளார்.
இதனை அவதானித்த மற்றொரு நபர் சம்பவம் தொடர்பாக ஊர் மக்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து மேற்படி நபரைத் தேடும் பணி ஊர் மக்களால் முன்னெடுக்கப்பட்டது.
பொலிஸார் விசாரணை
நீண்டநேரமாகத் தேடுதல் இடம்பெற்று வந்த நிலையில் சிலமணி நேரங்களின் பின்னர் அவரது சடலம் நீருக்குள் இருந்து மீட்கப்பட்டது.
சம்பவத்தில் தரணிக்குளம் பகுதியைச் சேர்ந்த குரு என்ற இரு பிள்ளைகளின் தந்தையே மரணமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 4 மணி நேரம் முன்

ஹாட் உடையில் வந்த ராஷ்மிகா.. பார்த்ததும் ஓடிப்போன ஏ.ஆர்.ரஹ்மான்! நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் Cineulagam

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

ஹர்திக்கின் படையை கடைசி ஓவரில் முடித்துவிட்ட சகோதரர் க்ருனால் பாண்ட்யா! மும்பை இந்தியன்ஸை வீழ்த்திய RCB News Lankasri

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri
